Arjun Tendulkar: ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளையும், அதிக ரசிகர்களையும் பெற்ற அணிகள் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். எனினும், 5 முறை சாம்பியனான மும்பை 10ஆவது இடத்திலும், 4 முறை சாம்பியனான சென்னை 9ஆவது இடத்திலும் கடந்தாண்டு புள்ளிப்பட்டியலில் நிறைவுசெய்தன. மேலும், இந்த தொடரில் மும்பை முதலிரண்டு போட்டிகளிலும், சென்னை குஜராத், ராஜஸ்தான் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிரேட்மார்க் MI!


தற்போது இரு அணிகளும், அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் உள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், மும்பையின் ஒட்டுமொத்த ஆட்டமும் அவர்களின் டிரேட்மார்க் ஆட்டமாக இருந்தது. 



ரோகித்தின் பவர்பிளே கேமியோ, திலக் வர்மாவின் அதிரடி கேமியோ, கேம்ரூன் கிரீனின் நிதானம் என பேட்டிங்கில் அசத்தியது. அதுமிட்டுமின்றி, பந்துவீச்சில் பெஹன்டிராப்பின் ஓப்பனிங் ஸ்பெல், பியூஷ் சாவ்லாவின் அனுபவம், கிரீனின் கட்டுக்கோப்பு, ரிலே மெரிடித்தின் டெத் ஓவர் அட்டாக் என பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பும்ரா, ஆர்ச்சர், பாண்டியா, பொல்லார்ட் இல்லாத அணியாக இருந்தாலும், தங்களாலும் வெல்ல முடியும் என பட்டவர்த்தனமாக அறிவித்துள்ளது. 


மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா?


அர்ஜுன் மீதான விமர்சனம்


இதில், அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் விடுபட்டுவிட்டதாக நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அவரின் மூன்று ஓவர்களை குறிப்பிடாமல் சென்றால், மும்பையின் வெற்றியே முழுமை பெறாது எனலாம். அவர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்து மணிக்கு 107 கி.மீ., வேகத்திலேயே வீசப்பட்டது. அவரின் சராசரி வேகமே மணிக்கு 125+ கி.மீ.,  ஆக இருக்கும் நிலையில், இது வேகப்பந்துவீச்சில் மிகவும் குறைவான வேகம் என கூறி அவரை சமூக வலைதளங்களில் வாட்டி வதக்கினர். ஆனால், கடைசி ஓவரில் அவரின் துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு கேலிகளையெல்லாம் காலி செய்தது. 



அர்ஜுனின் அறுவடை


கடைசி ஓவர் மட்டுமின்றி முதல் ஓவரில், ஹாரி ப்ரூக்கிற்கு ஆப் சைட்டில் பெரிதாக இடம் கொடுக்காமல், உடலுக்கு உள்ளேய பந்தை வீசியதும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. கடைசி ஓவரின் அவரின் வேரியஷன்கள், பிளாக்ஹோலில் துல்லியமாக வீசியது ஆகியவற்றால் பேட்டர்கள் ரன் எடுக்க தவறினர். இதற்கான அறுவடையாக கடைசி பந்தில் அவருக்கு விக்கெட்டாக கிடைத்தது. 


கிடைத்தது புள்ளிகள் மட்டுமில்லை...


அந்த விக்கெட் பெரிய விஷயம் இல்லையென்றாலும், இதனால் கிடைத்த நம்பிக்கை அவரின் அடுத்த போட்டியில் நிச்சயம் பிரதிபலிக்கும். மும்பை அணி நிர்வாகம், இவரின் வேகத்தில் சற்று சிரத்தையெடுத்து பயிற்சி கொடுக்கும்பட்சத்தில், அர்ஜுன் இந்திய அணியில் விளையாடுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம். 



நேற்றைய வெற்றி, மும்பை அணிக்கு வெறும் 2 புள்ளிகளை மட்டும் கொடுக்கவில்லை, சுமார் அடுத்த 5 வருடங்களுக்கு திறன்வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரையும் கொடுத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அர்ஜுன், டெண்டுல்கரின் மகனாக அல்லாமல் அர்ஜுனாக அறியப்படுவதற்கான திறன் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | CSKvsRCB: ஓவரா கொண்டாடாதீங்க விராட் கோலி - 10% பைன் போட்ட பிசிசிஐ: இதுதான் காரணம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ