இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்றது ஒரு சாதனை என்றால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  எம்எஸ் தோனி களம் இறங்கியபோது, 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார் என்பது மற்றுமொரு சாதனை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் வரலாற்றில் 250 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே அணியின் பெருமைகளில் நிச்சயம் ஒருவர் என்பது உலகறிந்த உண்மை. அதேபோல, டி20 சாம்பியன்ஷிப்பில் அதிக போட்டிகளில் விளையாடிய 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது.


அதில் முதல் இடத்தில் இருப்பவர் தல மகேந்திர சிங் தோனி தான்.


மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே! 


எம்எஸ் தோனி
சிஎஸ்கே கேப்டன் இதுவரை 250 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (மே 28), அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்ல, தோனிக்கும் மிகவும் முக்கியமான நாள். 250 போட்டிகளில் விளையாடிய தோனியின் சாதனை, ஐபிஎல் லீக் வரலாற்றில் எந்த வீரரும் எட்டாத சாதனையாகும்.


ரோஹித் சர்மா


மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா 243 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


தினேஷ் கார்த்திக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் மொத்தம் 242 ஆட்டங்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


விராட் கோலி
RCB ஜாம்பவான் விராட் கோலி 16 சீசன்களில் 237 போட்டிகளில் விளையாடி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.



ரவீந்திர ஜடேஜா
சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இதுவரை ஐபிஎல்லில் 225 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதிக அளவு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
 
ஷிகர் தவான்
இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 217 போட்டிகள் விளையாடி ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் நிச்சயமாக ஐபிஎல் ஜாம்பவான்களில் ஒருவர் ஆவார்.


மேலும் படிக்க | CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்
 
சுரேஷ் ரெய்னா
'சின்ன தல' சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா விளையாடிய பெரும்பாலான போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கானது, அதன் பிறகு, குஜராத் லயன்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.


ராபின் உத்தப்பா
சிஎஸ்கேயை தனது வீடு என்று அழைக்கும் ராபின் உத்தப்பா, இந்தியன் பிரீமியர் லீக்கில் 205 போட்டிகளில் விளையாடியுள்ளார். 


அம்பதி ராயுடு
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள அம்பதி ராயுடு, ஒட்டுமொத்தமாக 203 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


ஆர் அஸ்வின்
ஆர் அஸ்வின் இதுவரை ஆடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 197 ஆட்டங்களில் பங்கேற்று இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.


மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? தோனி சொன்ன முக்கிய பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ