எம்எஸ் தோனி தலைமையில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஐபிஎல் 2023-ல் முதல் ஆட்டத்திலேயே அதாவது மார்ச் 31 ஆம் தேதி களம் காண்கிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதற்காக எம்எஸ் தோனி தலைமையிலான படை, சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அணியின் முன்னணி நட்சத்திரங்களான ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே ஆகியோர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எஞ்சியிருக்கும் தங்களின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை முடித்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர் முடிவடைந்ததும் சிஎஸ்கே கோட்டைக்கு திரும்ப இருக்கிறார். இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது தோனி படை. ஏனென்றால் 41 வயதாகும் தோனிக்கு இந்த ஐபிஎல் ஏறக்குறைய கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரை வெற்றியுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து வீரர்களும் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | IPL 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவார் தோனி! ரசிகர்களுக்கு குஷி


தோனியும் அதே முடிவில் தான் இருக்கிறார். அதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பயிற்சியின்போது தோனி அடித்த மெகா சிக்ஸ்சர்கள் வீடியோவை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது, பைசெப்ஸ்களுடன் கம்பீரமாக அவர் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படம் சிஎஸ்கே மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. காரணம், 41 வயதாகும் தோனி தன்னுடைய உடலை இரும்புபோல் வைத்திருப்பதுடன், பலமான பைசெப்களையும் வைத்திருக்கிறார். அவரை பார்த்த ரசிகர்கள், தோனியை இப்படி பார்க்கும்போது தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.  



தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த சீசனில் 9வது இடத்தைப் பிடித்தது. 14 லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. சிஎஸ்கேவின் ஐபில் வரலாற்றில் இது ஒரு மோசமான சீசனாகவும் அந்த அணிக்கு இருந்தது. இருப்பினும் பழைய பன்னீர்செல்வமாக இந்த ஐபிஎல்லில் கம்பேக் கொடுக்க இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 


மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணிக்கு வேறு வழியில்லை... முதல் போட்டியின் பிளேயிங் லெவன் கணிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ