IND vs AUS 1st ODI, Predicted Playing XI: ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போட்ஸ் சேனலிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணலாம்.
நியூசி., பின் ஆஸி.,
கேப்டன் ரோஹித் ஷர்மா தனது தனிப்பட்ட காரணத்திற்காக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார். இந்திய அணி கடைசியாக நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில், இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. மேலும், இந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், ஒவ்வொரு ஒருநாள் போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் விளையாடும் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
சுப்மான் கில்
ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், இளம் வீரர் சுப்மான் கில், பொறுப்புடன் விளையாடி வலுவான தொடக்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 23 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த தொடரின் முதல் போட்டியில், அவர் இரட்டை சதம் அடித்தார். மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் எடுத்திருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷான்
முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா இல்லாததால், சுப்மான் கில் உடன் இஷான் கிஷன் இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று ஹர்திக் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னான செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார். கிஷானும் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். சமீபத்தில், வங்கதேச அணியுடன் இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.
கே.எல். ராகுல்
30 வயதான கே.எல்.ராகுல், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமான பார்மிற்காக நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். இருப்பினும், ரோஹித் மற்றும் ரிஷப் பந்த் இல்லாததால், முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
#INDvAUS pic.twitter.com/zEHVwT6mdb
— BCCI (@BCCI) March 16, 2023
விராட் கோலி
இந்தாண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் இரண்டு சதங்களை விளாசினார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடருக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால் முதல் போட்டியில் இருந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்ய கோலி ஆர்வமாக இருப்பார்.
சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது சக்திவாய்ந்த டி20 பேட்டர் மிகவும் சாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், சூர்யகுமார் நிச்சயம் பெரிய ரன்களை பெறக்கூடியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஹர்திக் பாண்டியா
வழக்கமான கேப்டன் ரோஹித் இல்லாத நிலையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் இந்திய அணியை வழிநடத்துவார். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்திக் இந்தியாவை வழிநடத்தியிருந்தார். இது தவிர, அவர் பல சந்தர்ப்பங்களில் இந்திய டி20 அணியை வழிநடத்தி பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
#TeamIndia trained at the Wankhede Stadium ahead of the 1st ODI against Australia.
Snapshots from the same#INDvAUS pic.twitter.com/UuaBhjbCaC
— BCCI (@BCCI) March 16, 2023
ரவீந்திர ஜடேஜா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் தனது வீரத்தால் அனைவரையும் மயக்கிவிட்டார், ஜடேஜா. இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்ரவுண்ட் பங்களிப்புக்காக ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இணைந்து போட்டியின் சிறந்த வீரர் விருதை வென்றார். சுழற்பந்து வீச்சுக்கு வலுசேர்க்கும் வகையில் பிளேயிங் லெவன் அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.
ஷர்துல் தாக்கூர்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாக்கூர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 31 வயதான ஆல்-ரவுண்டர் பேட்டிங்கில் ஒரு முக்கிய செயல்திறன் கொண்டவர் மற்றும் இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு வலுவான அடித்தளத்தை வழங்க முடியும். இருப்பினும், அக்சர் படேல் அவருக்கு வலுவான போட்டியாளராக இருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர்
சுந்தர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர், அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தாக்குதலுக்கு நல்ல பலத்தை வழங்க முடியும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, டெத் ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
முகமது ஷமி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஷமி முக்கிய பங்கு வகித்தார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா இல்லாத நிலையில், ஷமி பொறுப்புடன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது சிராஜ்
29 வயதான வேகப்பந்து வீச்சாளர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, முழு தொடரிலும் எதிரணி பேட்டர்களை தொந்தரவு செய்தார். அபாரமான வேகத்திற்கு பெயர் பெற்ற அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வேக தாக்குதலின் முக்கிய அம்சமாக இருப்பார்.
'Their intensity in practice rubs onto the youngsters'
Ahead of the #INDvAUS ODI series opener, Fielding Coach T. Dilip explains how @imVkohli & @imjadeja have been role models in the field for the youngsters#TeamIndia | @mastercardindia pic.twitter.com/4NourJOfR7
— BCCI (@BCCI) March 15, 2023
ஸ்குவாட்
இவர்களை தவிர, அக்சர் படேல், சஹால், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், உம்ரான் மாலிக் ஆகியோரும் ஸ்குவாடில் உள்ளனர். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ