IPL 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவார் தோனி! ரசிகர்களுக்கு குஷி
எம்எஸ் தோனி ஐபிஎல் 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்ற ஊகங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 சீசனில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார்
IPL 2023: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி தனது டி20 லீக்கின் இறுதி சீசனில் விளையாடலாம் என்று ஊகங்கள் உள்ளன. ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்துவார், மார்ச் 31 அன்று அவரது அணிக்கும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான மோதலுடன் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்குகிறது.
ஆனால், தோனி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியும் ஊகமாக வெளியாகியுள்ளது. சிஎஸ்கே பேட்டர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2024 இல் தோனி விளையாடக் கூடும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) 2023ல் இந்தியா மஹாராஜாஸ் அணிக்காக விளையாடி வருகிறார்,
“அடுத்த ஆண்டும் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம், அவருடைய திறனும், தகுதியும் நன்றாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே, அவர் அடுத்த ஆண்டில் விளையாடுவார்” என்று புதன்கிழமை (மார்ச் 15) இரவு உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரெய்னா தெரிவித்தார்.
தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்து சுரேஷ் ரெய்னா பேசும் வீடியோ இது.
"சிஎஸ்கே அணி மிகவும் வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன், ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற சில வீரர்களும் அணியில் இணைகிறார்கள்" என்று முன்னாள் சிஎஸ்கே மேலும் கூறினார்.
தோனி ரெய்னாவுடன் தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரெய்னா, “ஆம் நாங்கள் அடிக்கடி போனில் பேசுகிறோம். அவர் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
ரெய்னாவைப் போல தோனி இன்னும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சிஎஸ்கே கேப்டன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் இன்னும் விலகவில்லை. பிசிசிஐ விதிகளின்படி, வெளிநாட்டு லீக்குகள் அல்லது வேறு எந்த லீக்களிலும் விளையாட, ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலக வேண்டும். இந்திய கிரிக்கெட் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் ஆகியவை அடங்கும்.
இதுவரை 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4,978 ரன்கள் எடுத்து, 39.2 சராசரியை வைத்திருக்கிறார். 24 அரைசதங்கள், 135.2 ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்துள்ளார். ஐபிஎல் 2022 இல், தோனி 14 போட்டிகளில் 232 ரன்கள் எடுத்தார், ஆனால் சிஎஸ்கே பிளேஆஃப் நிலைக்கு முன்னேறத் தவறிவிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ