ஐபிஎல் 2023: டிக்கெட் விற்பனை தொடங்கியது..! சிஎஸ்கே - குஜராத் மேட்ச் டிக்கெட் வாங்குவது எப்படி?

ஐபில் 2023 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோத இருக்கும் நிலையில், அந்த போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொளவோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 12, 2023, 12:06 PM IST
ஐபிஎல் 2023: டிக்கெட் விற்பனை தொடங்கியது..! சிஎஸ்கே - குஜராத் மேட்ச் டிக்கெட் வாங்குவது எப்படி? title=

ஐபிஎல் 2023 முதல் போட்டியில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்க முடியும். இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது. 

தங்கள் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அந்த பதிவில் ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 10 ஆம் தேதி முதல் கிடைக்கும். தங்கள் அணி விளையாடும் ஹோம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் மார்ச் 10 மாலை 6 மணி முதல் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யபட்டிருப்பதாகவும் குஜராத் டைட்டன்ஸ் அணி தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க |  Viral Video: ரசிகரை வெறித்தனமாக அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... தொப்பியை தொட்டதால் கோபம்!

ஆன்லைனில் வாங்குவது எப்படி?

குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும் போட்டிகளை வாங்க விரும்பும் ரசிகர்கள் PayTm-ன் அதிகாரப்பூர்வ செயலி பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பேடிஎம் நிறுவனம் ஐபிஎல் 2023-க்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னராக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கரம் கோர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹோம் மேட்சுகளுக்கான டிக்கெட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிடி அணியின் டைட்டன்ஸ் ஃபேமிலும் டிக்கெட் கிடைக்கும்.  

தோனி vs பாண்டியா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணி. அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமை அந்த அணி வசமே இருக்கிறது. கேப்டன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறது. அதேபோல் முதன்முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு சாம்பியனாக உள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் சாம்பியன்கள் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News