சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முந்தைய சீசன்களில் விளையாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கரண் இந்த ஆண்டு தன்னுடைய முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். 2019 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவரை 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. 2021-ல் அதே விலையில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்டார். அண்மையில் முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 18.5 கோடிக்கு மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவராகவும் மாறிவிட்டார் சாம் கரண். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த ஆல்ரவுண்டர்


சாம் கரண் மீது ஐபிஎல் அணிகள் வைக்கும் நம்பிக்கைக்கு மிக முக்கிய காரணம் அவர் இளம் வீரராக இருப்பது மட்டுமல்லாமல், சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருக்கிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார். அந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடி சாம் கரண், பேட்டிங்கில் 23.25 சராசரியிலும், 131.91 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 186 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 8.19 என்ற பொருளாதார விகிதத்தில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஆல்ரவுண்ட் ஆட்டம் சிஎஸ்கே பிளேஆஃப்களை அடைய உதவியது. 


மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு


2019 சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சாம்கரண்,  ஒன்பது போட்டிகளில் 23.75 சராசரி மற்றும் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 95 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 9.78 என்ற பொருளாதார விகிதத்தில் 10 விக்கெட்டுகளையும் எடுத்தார். 2021 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒன்பது போட்டிகளில் விளையாடி 18.66 சராசரி மற்றும் 193.10 ஸ்ட்ரைக் ரேட்டில் 56 ரன்கள் எடுத்தார். அவர் 36.44 சராசரி மற்றும் 9.93 என்ற பொருளாதார விகிதத்தில் ஒன்பது விக்கெட்டுகளையும் எடுத்தார். சராசரியாக 149 ஸ்டைக்ரேட் வைத்திருக்கிறார். 


சாம் கரணின் சிறந்த ஆட்டம்


2019 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது அவரின் ஐபிஎல் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா மற்றும் சந்தீப் லாமிச்சனே ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி ஐபிஎல்லில் ஹாட்ரிக் எடுத்த மூன்றாவது இளைய வீரர் ஆனார்.


2020 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பெற்ற வெற்றிக்கு சாம் கரணின் ஆட்டமே காரணம். 168 என்ற வெற்றி இலக்கை துரத்திய சிஎஸ்கே ஒரு கட்டத்தில் 92/7 என்ற நிலையில் திணறியது. குர்ரன் உள்ளே வந்து 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 


மேலும் படிக்க | IND vs AUS: ஒருநாள் போட்டியில் முக்கிய மாற்றம்! ரோஹித் விலகல், ஹர்திக் தான் கேப்டன்!


மேலும் படிக்க | IPL 2023: தோனிக்கு 41 வயது நிஜமா? பைசெப்களுடன் பயிற்சி எடுக்கும் தல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ