சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணிகளுக்கு இடையான போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. மற்ற போட்டிகளைக் காட்டிலும் இந்த போட்டியின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்தது, காரணம் பெங்களூர் அணியில் விராட் கோலியும், சென்னை அணியில் தோனியின் விளையாடுவது தான். மேலும் சென்னை அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ளார், இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரில் முதலில் பில்டிங் தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?


பெங்களூரு சின்னசாமி மைதானம் மற்ற மைதானங்களை விட சிறிய மைதானம் என்பதால் இங்கு பொதுவாகவே சிக்ஸர் மழை பொழியும்.  அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழைகளை பொழிந்தனர்.  கனவே 45 பந்திகளில் 83 ரன்கள், ரஹானே 20 பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர்.  அதிரடியாக விளையாடிய சிவம் டுபே 27 பந்திகளில் 5 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் குவித்தார்.  அடுத்தடுத்து வந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் அடிக்க வில்லை என்றாலும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்.



கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.  அதன் பிறகு இறங்கி மஹிபால் லோமரோர் ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினார்.  அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும்  மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணியின் பவுலர்களை நாலா புறமும் சிதறவிட்டனர்.  இவர்கள் ஆட்டமிழக்காமல் நின்றால் 15 ஓவரிலேயே பெங்களூரு அணி வெற்றி பெறும் நிலையில் விளையாடினர்.   ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ரன்களிலும், மேக்ஸ்வெல் 76 ரன்களிலும் ஆட்டமிழந்தினர்.  இதன் பின்பு தான் சென்னை அணியின் ரசிகர்களுக்கு உயிர் வந்தது.  



இருப்பினும் தினேஷ் கார்த்திக் 14 பள்ளிகளில் 28 ரன்கள் அடித்ததால் ஆட்டம் மீண்டும் சூடு பிடித்தது.  18 வது ஓவரை வீசிய மதீஷா சிறப்பாக வந்து வீசினார், அந்த ஓவர் திருப்புமுனையாக அமைந்தது.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் மதீஷா மீண்டும் சிறப்பாக பந்து வீசினார். இதனால் சென்னை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.



மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மகளிர் அணியின் ஜெர்சியில் மும்பை இந்தியன்ஸ் - ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ