IPL 2023: குவாலிபயர் 1 போட்டிக்கு குஜராத் தகுதி... ஹைதராபாத் படுதோல்வி!
IPL 2023 GT vs SRH: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை நீடிக்கிறது.
IPL 2023 GT vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 62ஆவது லீக் போட்டியில், நடப்பு சாம்பயின் குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று மோதியது. குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
சாஹா டக்
அதன்படி, குஜராத் ஓப்பனராக களமிறங்கிய சாஹா டக்-அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால், இதன்பின், சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் விக்கெட்டை விடாமல் பவுண்டரிகளை பறக்கவிட்டனர் எனலாம். சுதர்சன் ஒருபுறம் நிதானம் காட்ட, சுப்மன் கில் பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். சிக்ஸர்கள் குறைவாக சென்ற நிலையில், பவுண்டரிகள் மட்டுமே அதிகம் சென்றது.
சுப்மன் - சுதர்சன் அதிரடி
அதன்படி, இந்த ஜோடி சுமார் 14 ஓவர்கள் வரை தாக்குபிடித்து 147 ரன்களை எடுத்தது. அப்போது சுதர்சன், 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 47 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த பாண்டியா 5, மில்லர் 7, தேவாட்டியா 3 ரன்கள் எடுத்து அடுத்டுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சத்ததையும் பதிவு செய்தார். கடைசி ஓவரில் சுப்மன் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் இதில் அடக்கம்.
கடைசி ஓவரில் 5 விக்கெட்டுகள்
கடைசி ஓவரில் முதல் சுப்மன் கில், இரண்டாம் பந்தில் ரஷித் கான், மூன்றாவது பந்தில் நூர் அகமது (ரன் அவுட்), ஐந்தாவது பந்தில் ஷமி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதன்மூலம், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. நடராஜன், புவனேஷ்வர் குமார், பரூக்கி ஆகியோர் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசி, குஜராத் அணியை 200 ரன்களை தொடவைக்கவில்லை. புவனேஷ்வர் குமார் 5, யான்சன், பரூக்கி, நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
மேலும் படிக்க | ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!
பவர்பிளேவில் 4 விக்கெட்டுகள்
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் ஆகியோர் சொற்ப ரன்களில், பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிந்த முதல் பந்தில் சன்விர் சிங் 7 ரன்களிலும், அதே ஓவரில் அப்துல் சமத் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 9ஆவது ஓவரில் யான்சன் 3 ரன்களில் வெளியேறய அதிரடி ஹென்ரிச் கிளாசனுக்கு புவனேஷ்வர் நல்ல பக்கபலமாக செயல்பட்டார்.
கிளாசன் போராட்டம்
கிளாசன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்து போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். 8 விக்கெட்டுகளை குஜராத் வீழ்த்தியிருந்தாலும், கிளாசனின் அதிரடியை கண்டு குஜராத் சற்று ஆட்டகண்டது எனலாம். அரைசதம் கடந்து தாக்கு பிடித்த கிளாசன் 17ஆவது ஓவரில் 5ஆவது பந்தில் 64(44) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டநாயகன் கில்
புவனேஷ்வர் அடுத்த 27 ரன்களில் ஆட்டமிழக்க ஹைதராபாத்தின் நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்தது. இதனால், 20 ஓவர்களில் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. குஜராத் இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. குஜராத் பந்துவீச்சில் ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
குவாலிபயர் 1 எப்படி?
தற்போது குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும், தற்போதைய புள்ளிவிவர நிலவரப்படி மும்பையின் அணியின் 18 புள்ளிகளை தவிர்த்து வேறு எந்த அணியாலும் 18 புள்ளிகளை எட்ட முடியாது. எனவே, குஜராத் அணி குவாலிபயர் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றதாக கூறப்பட்டது. இன்னும் குஜராத் அணிக்கு ஒரே ஒரு போட்டி உள்ளது. சன்ரைசர்ஸ் அணி பிளேஆப் வாய்ப்பு இழந்துவிட்ட நிலையில், 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் நீடிக்கிறது.
மேலும் படிக்க | MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ