IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி! சுருண்டது மும்பை இண்டியன்ஸ்
MI vs CSK: ஐபிஎல் 2023 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடியது
IPL 2023 Match 12: ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நீண்ட காலத்திற்கு பிறகு இரு அணிகளும் மும்பை வான்கடேவில் மோதின.
158 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. அதேபோல, நடப்பு ஐபிஎல் தொடரில், வெறும் 19 பந்துகளில் அரை சதம் விளாசிய ரஹானே, அதிவேகமாக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கான்வே டக் அவுட்டானார்.
மேலும் படிக்க | CSKvsMI: மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்..!
ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்த ரஹானே, ஆர்ஷத் கான் வீசிய 4 ஓவரில் மட்டும் 24 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதிரடியாய் விளையாடிய ரஹானே 27 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். சிவம் துபே ரன்கள் சேர்த்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ருதுராஜ் 40 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 3 பவுண்டரிகளை அடித்து 20 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 11 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இதுவரை இந்த அணிகள் ஐபிஎல் வரலாற்றில் 35 முறை மோதியுள்ளன. இதில், மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தோனி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் எடுத்தது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பிறகு மும்பை அணி இரண்டாவது போட்டியில் விளையாடியது.
இந்த சீசனில் இது சிஎஸ்கேயின் மூன்றாவது ஆட்டமாகும். இன்றைய வெற்றியுடன் சேர்த்து சென்னை அணி இரு போட்டிகளில் வெற்றி, பெற்றும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.
MI vs CSK அவர்களின் வலுவான போட்டியின் காரணமாக ஐபிஎல்லின் 'எல் கிளாசிகோ' என்றும் புகழப்படுகிறது. எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கருதப்படும் இந்தத் தொடரை வெல்லதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ