IPL 2023 MI vs CSK Match Update: நடப்பு ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு இரு அணிகளும் மும்பை வான்கடேவில் மோதுகின்றன.
மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இதுவரை இந்த அணிகள் ஐபிஎல் வரலாற்றில் 34 முறை மோதியுள்ளன. இதில், மும்பை அணி 20 போட்டிகளிலும், சென்னை அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இரு அணிகள் மோதும் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில், இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸிற்கு முன்னதாக தோனியும், மூத்த வீரர் சச்சினும் மைதானத்தில் உரையாடியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே லெவன்
பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பிளேயங் லெவன் குறித்தும் தோனி அறிவித்தார். அதாவது, சிறு காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. மொயின் அலிக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரும் இன்று பங்கேற்கவில்லை. மேலும், ஹங்கரேக்கர், ராயுடுவை மாற்றுவீரர்களாக அறிவித்துள்ளனர்.
Here we go!#MIvCSK #WhistlePodu #IPL2023 #Yellove pic.twitter.com/rmMDpke2nc
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2023
அவர்களுக்கு பதில் ராஹானே, பிரட்டோரியஸ், சிஸாண்டா மகாலா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சு சற்று பலமடைந்துள்ளது. முதல் போட்டியில், குஜராத்திடம் தோல்வியடைந்தாலும், அடுத்து பலம் வாய்ந்த லக்னோவை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.
Match अंगार, आपली team तयार
Your playing XI for #MIvCSK! #OneFamily #MumbaiMeriJaan #MIvCSK #MumbaiIndians #TATAIPL #IPL2023 @Dream11 pic.twitter.com/hpe1kqFpqN
— Mumbai Indians (@mipaltan) April 8, 2023
மும்பையில் மாற்றம்
தொடர்ந்து, மும்பை அணியிலும் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் சிறு காயம் காரணமாக விளையாடவில்லை. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அர்ஜுன் டெண்டுல்கர் மாற்று வீரர்களுள் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. எனவே, சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்க அந்த அணி முயற்சிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ