IPL 2023: ஆர்சிபி படுதோல்வி... புள்ளிப்பட்டியலில் கேகேஆர் 4ஆம் இடம்!
IPL 2023 KKR vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
IPL 2023 KKR vs RCB: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியுடன் பெங்களூரு அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர் குர்பாஸ் நல்ல தொடக்கத்தை அளித்தார்.
இருப்பினும், மற்ற தொடக்க வீரர்கள் சொதப்பினர். வெங்கடேஷ் ஐயர் 3, மன்தீப் சிங் 0, நிதிஷ் ராணா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்த குர்பாஸ் 57(44) ரன்களிலும், ரஸ்ஸல் டக் அவுட்டும் ஆக அந்த அணி 89 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது தவித்து.
மிரட்டிய ஷர்துல் தாக்கூர்
அந்த சூழலில், ரிங்கு சிங் உடன் ஷர்துல் தாக்கூர் ஜோடி சேர்ந்து, ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தனர். ரிங்கு சிங் 33 பந்துகளில் 46 ரன்களை குவித்து 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷர்துல் - ரிங்கு ஜோடி 103 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து.
தொடர்ந்து, ஷர்துல் தாக்கூர் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் என 29 பந்துகளில் 68 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா 204 ரன்களை குவித்தது. ஆர்சிபி தரப்பில் டேவிட் வில்லி, கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி இம்பாக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயருக்கு பதில், சுயாஷ் சர்மாவை உள்ளே எடுத்தது.
மேலும் படிக்க | தோனி அடித்த 2 சிகஸ்ர்கள்... 'எங்களால் நம்ப முடியவில்லை' - வாயை பிளந்த மார்க் வுட்!
ஆர்சிபியின் சரிவு
205 ரன்களுடன் களமிறங்கிய விராட் - டூ பிளேசிஸ் இணை தொடக்கத்தில் கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அந்த ஜோடி, 28 பந்துகளிலேயே 44 ரன்களை குவித்தது. இருப்பினும், சுனில் நரைன் 5ஆவது ஓவரில் விராட் கோலி கிளீன் போல்டாகி ஆட்டமிழக்க, அங்கிருந்து ஆர்சிபி அணி சரிவு கண்டது எனலாம். விராட் 18 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்தார்.
அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில், டூ பிளேசிஸ் வருண் சக்ரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து, 23 ரன்களுடன் நடையைக்கட்டினார். இதையடுத்து, மேக்ஸ்வெல் 5, ஹர்ஷல் படேல் 0, ஷாபாஸ் அகமது 1 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சற்று நேரம் தாக்குபிடித்த பிரேஸ்வெல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் இம்பாக்ட் பிளேயர்
இதையடுத்து, ஆர்சிபி அணி இந்த தொடரில் தனது முதல் இம்பாக்ட் பிளேயரை இந்த சூழலில் களமிறக்கியது. அந்த அணியின் இம்பாக்ட் பிளேயராக சிராஜுக்கு பதில் அனுஜ் ராவத் பேட்டிங் செய்ய வந்தார். அவரும் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, டேவிட் வில்லி மட்டும் களத்தில் நின்று தாக்குபிடித்தார். இறுதியில் ஆகாஷ் தீப் 8 பந்துகளில் 17 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, 17.4 ஓவர்களில் ஆர்சிபி 123 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் வரும் சக்ரவர்த்தி 4, அறிமுக வீரர் சுயாஷ் 3, சுனில் நரைன் 2, ஷர்தல் 1 ஆகிய விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷர்துல் தாக்கூர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
புள்ளிப்பட்டியல்
கொல்கத்தா அணி பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், இந்த இரண்டாவது போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அதிக ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. குஜராத், பஞ்சாப் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளன.
மேலும் படிக்க | IPL 2023 RR vs PBKS: ஓப்பனரான அஸ்வின்... பட்லருக்கு என்ன ஆச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ