ஹைதராபாத் பிட்சில் வார்னர் போட்ட பிளான்: ஒரங்கட்டிய சன்ரைசர்ஸூக்கு செம ஸ்கெட்ச்..!
டெல்லி கேப்டன் வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் விளையாட இருப்பதாக அறிவித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிட்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக இருந்தார்.
டேவிட் வார்னர் பிளான்
ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் ஏய்னர் மார்கிராம் சன்ரைசர்ஸ் அணிக்கும், டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும் கேப்டனாக செயல்படுகின்றனர். வார்னருக்கு ஹைதராபாத் பிட்சை பற்றி நன்கு தெரியும் என்பதால் டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். இந்த மைதானத்தில் சேஸிங் செய்வது அவ்வளவு சுபமில்லை என்பது வார்னருக்கு தெரியும். பல ஆண்டுகளாக அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, இந்த பிட்சில் பல போட்டிகள் விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவரது தலைமையில் சன்ரசைர்ஸ் அணி ஒருமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறது.
மேலும் படிக்க | IPL 2023: கொல்கத்தாவை வதம் செய்த சிஎஸ்கே... புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
பிரித்திவி ஷா நீக்கம்
இப்படி பல மலரும் நினைவுகளை சன்ரைசர்ஸ் அணியுடன் வைத்திருக்கும் வார்னர், இப்போது அந்த அணிக்கு எதிராகவே மற்றொரு அணியில் கேப்டனாக விளையாட இருக்கிறார். டெல்லி அணியில் ஒரு மாற்றமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிரித்திவி ஷா அதிரடியாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இம்பாக்ட் பிளேயரில் கூட அவரது பெயர் இல்லை. தொடர்ந்து மோசமாக விளையாடி வந்ததால் அவரை அணியில் இருந்து நீக்கியிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் இருக்கிறது. அதேபோல் டெல்லி அணியும் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருப்பதால் புள்ளிப் பட்டியிலிலும், ஐபிஎல் குவாலிஃபையர் தகுதிக்கான வாய்ப்பில் நீடிக்கவும் அந்த அணிக்கு இந்த வெற்றி அவசியமாகிறது.
டேவிட் வார்னர் கசப்பான உணர்வு
அதேநேரத்தில் வார்னருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் தனிப்பட்ட முறையில் சுமூகமான உறவு இல்லை. அவர் அந்த அணியில் கேப்டனாக இருந்தபோது, அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிளேயிங் லெவனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு அந்த அணிக்கு எதிராக மட்டும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டியிலும் அதே முனைப்புடன் விளையாடுகிறார்.
மேலும் படிக்க | சென்னை vs கொல்கத்தா: பலம் மற்றும் பலவீனம்! இன்றைய போட்டி கேகேஆர் அணிக்கு சாதகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ