IPL 2023 KKR vs CSK: நடப்பு ஆபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மாஸ் தொடக்கம்
அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே - ருதுராஜ் ஜோடி மாஸான தொடக்கத்தை அளித்தது. அந்த ஜோடி 7.3 ஓவர்களில் 73 ரன்களை எடுத்தபோது, கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அரைசதம் கடந்த கான்வே 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, 12.1 ஓவர்களில் சிஎஸ்கே 109 ரன்களை எடுத்திருந்தது.
ஃபயர் காட்டிய ரஹானே - தூபே
அப்போது, ரஹானே உடன் தூபே களம்கண்டு கேகேஆர் பந்துவீச்சை சூறையாடியது. இந்த ஜோடி 32 பந்துகளில் 85 ரன்களை குவித்து அசத்தியது. துபே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ராஹானே தொடர்ந்து அதிரடி காட்ட, அடுத்து வந்த ஜடேஜாவும் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
236 இலக்கு
தோனி கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் களமிறங்கி 2 ரன்களை மட்டும் எடுத்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை சிஎஸ்கே குவித்தது. ரஹானே 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 29 பந்துகளில் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கெஜ்ரோலியா 2 விக்கெட்டுகளையும், வருண், சுயாஷ் சர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மோசமான தொடக்கம்
அடுத்த வந்த கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஓப்பனர்களான சுனில் நரைன் ரன் ஏதும் இன்றி முதல் ஓவரிலும், ஜெகதீசன் 1 ரன்னில் இரண்டாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். பவர்பிளே ஓவரில் வெங்கடேஷ் ஐயர் நிதானம் காட்ட, கேப்டன் நிதிஷ் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார்.
தோனியே கொண்டாடிய விக்கெட்
இருப்பினும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களுடனும், நிதிஷ் ராணா 27 ரன்களுடனும் ஆட்டமிழக்க, கேகேஆர் 8.2 ஓவர்களில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, களத்தில் இருந்த ராய், ரிங்கு சிங்குடன் இணைந்து அதிரடியை கைக்கொண்டார். அவரின் ஆட்டம் கேகேஆர் அணிக்கு நம்பிக்கையையும், சென்னை அணிக்கு அச்சத்தையும் அளித்தது எனலாம்.
TIMBER!
Maheesh Theekshana bounces back to dismiss the dangerous Jason Roy who departs for 61(26)
Follow the match https://t.co/j56FWB88GA #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/GDh6a9XwVv
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
அவர் 26 பந்துகளில் 61 ரன்களை எடுத்து தீக்ஷனா பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால், கேகேஆர் நம்பிக்கை குறைய தொடங்கியது. அவரின் விக்கெட்டை வழக்கத்திற்கு மாறாக தோனியே மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது, அவரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்.
சிஎஸ்கே முதலிடம்
மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான ரிங்கு சிங் களத்தில் இருந்தாலும், வேறு யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை. ரஸ்ஸல் 9, டேவிட் வீஸ் 1, உமேஷ் 4 என அடுத்தடுத்து பேட்டர்கள் பெவிலியன் திரும்பினர். இதனால், கேகேஆர் அணியால் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தனது 5ஆவது வெற்றி பதிவு செய்தது. ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வானார்.
A convincingrun win for @ChennaiIPL in Kolkata
They move to the of the Points Table
Scorecard https://t.co/j56FWB88GA #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/u7LJLGwKyC
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
இத்தொடரில் 5ஆவது வெற்றியை பெறும் முதல் அணி சிஎஸ்கே தான். இதனால், புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ