Chennai Super Kings vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2023 தொடரின் 33 வது லீக் போட்டியில் இன்றிரவு (ஏப்ரல் 23, ஞாயிற்றுக் கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகள் மோதும் 29வது போட்டி இதுவாகும். இதற்கு முன் நடந்த 28 ஆட்டங்களில் கொல்கத்தா அணி 10 ஆட்டங்களிலும், சென்னை அணி 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது இதுவரை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் சிஎஸ்கே அணி தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோல இந்த இருஅணிகள் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் சிஎஸ்கே நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் கேகேஆர்வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை:
இந்த முறையும் தோனி தலைமையிலான சென்னை அணி கொல்கத்தா அணியை விட சிறந்த பார்மில் உள்ளது. இதுவரை சென்னை அணி ஆடிய 6 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் 4ல் தோல்வியடைந்து எட்டாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
கொல்கத்தா அணியின் பலம் மற்றும் பலவீனம்:
ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணியின் செயல்பாடு மற்றும் செயல்திறனை வைத்து பார்த்தால் பின்தங்கியிருக்கலாம், ஆனால் இந்த அணி மிகவும் வலுவானது. கொல்கத்தா தோல்வியடைந்த அனைத்து போட்டிகளும் பரபரப்பானவை. இந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல சமநிலையுடன் உள்ளது. பெரும்பாலான பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் காணப்படுகின்றனர். இந்த சீசனில் ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தங்களது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: உருண்டு புரண்டு முதல் வெற்றியை பெற்ற டெல்லி... கொல்கத்தாவின் போராட்டம் வீண்!
சென்னை அணியின் பலம் மற்றும் பலவீனம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் உள்ளனர். கான்வே, கெய்க்வாட், ரஹானே ஆகியோர் அதிரடியான பேட்டிங் செய்கின்றனர். அதேபோல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொயீன் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி ஆகியோரும் நல்ல பார்மில் காணப்படுகின்றனர். இந்த அணியின் சுழல் பந்து வீச்சு வலுவடைந்து வருகிறது. ஆனால் சென்னை அணி வேகப்பந்து வீச்சிலும் பலவீனமாக உள்ளது.
எம்எஸ் தோனியின் வெற்றி பயணம் தொடருமா?
மொத்தத்தில் இன்றைய போட்டி இரு அணிகளும் சமமான போட்டியாகவே இருக்கும். சென்னை அணிக்கு நிச்சயமாக வெற்றி பயணத்தை தொடரும். ஆனால் இன்றைய போட்டி கேகேஆர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால், இது கொல்கத்தா அணிக்கு கூடுதல் ஊக்கமாக இருக்கும். அப்படியானா சூழ்நிலையில், இந்தப் போட்டியின் வெற்றி எந்த திசையிலும் திரும்பலாம்.
மேலும் படிக்க: சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கத்தில் தோனி ஆடும் கடைசி போட்டி..! தேதி இதோ
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் நிலவரம்:
இந்த மைதானத்தில் விளையாடிய முந்தைய ஆட்டங்களின் ஆடுகளத்தை வைத்துப் பார்த்தால், இது பேட்டர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருவருக்கும் உதவும் என்று ஒருவர் கருதலாம். போட்டியின் முதல் பாதியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். அதன்பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இன்றைய போட்டியில் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா ஐபிஎல் பதிவுகள் & புள்ளிவிவரங்கள்:
கொல்கத்தாவின் ஆடுகளம் பேட்டர்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் சமமாக உதவுகிறது. இந்த மைதானத்தில் முந்தைய ஆட்டத்தில், ஹாரி புரூக் ஐபிஎல் 2023 இன் முதல் இன்னிங்ஸில் முதல் சதத்தை அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில், மயங்க் மார்கண்டே தனது பந்துவீச்சில் 2/27 என்ற அடிப்படியில் விக்கெட்டை எடுத்தார்.
மேலும் படிக்க: ஏய் சும்மா இருடா.. மைதானத்தில் ஜடேஜாவை எச்சரித்த தோனி! என்ன நடந்தது?
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடிய ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:
- மொத்தம் ஐபிஎல் போட்டிகள் : 80
- முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்ற போட்டிகள் : 33
- இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வென்ற போட்டிகள் : 47.
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 159
இரு அணிகளிலும் விளையாடும் சாத்தியமான 11 பேர் (கணிப்பு):
சென்னையில் விளையாடும் 11 பேர்: ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, மதீஷ் பத்திரனா மற்றும் மகிஷ் தீக்ஷனா.
கொல்கத்தாவில் விளையாடும் 11 பேர்: வெங்கடேஷ் ஐயர், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதிஷ் ராணா (கேப்டன்), சுனில் நரைன், அனுகுல் ராய், ரிங்கு சிங், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ