DC vs GT Match Updates: ஐபிஎல் 16வது சீசனின் ஏழாவது ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2023 தொடரில் முதல் போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்து உள்ளது. அதேநேரத்தில் குஜராத் அணி முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியுடன் இருக்கிறது. நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ய விரும்புகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெற்றியைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். இன்றைய ஐபிஎல் போட்டியை எப்போது, ​​எங்கு, எப்படி நேரடியாகப் பார்க்கலாம் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2023 தொடரின் ஏழாவது லீக் போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும்?
இன்றைய (ஏப்ரல் 4, செவ்வாய்கிழமை) 7வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.


டெல்லி மற்றும் குஜராத் மோதும் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் 2023 இன் ஏழாவது போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும். 


மேலும் படிக்க: ஐபிஎல் 2023 முதல் போட்டியை வென்று நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்தது குஜராத் டைட்டன்ஸ்


டெல்லி vs குஜராத்: எந்த டிவி சேனலில் நேரடியாகப் பார்க்கலாம்?
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் வெவ்வேறு சேனல்களில் நேரடியாகப் பார்க்கலாம். அதாவது வெவ்வேறு சேனல்களில் வெவ்வேறு மொழிகளில் காணலாம்.


டெல்லி vs குஜராத் போட்டியை எப்படி இலவசமாக பார்ப்பது?
ஐபிஎல் 2022 தொடரின் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டியை நேரடியாக ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம், அங்கு நீங்கள் 12 மொழிகளில் 


அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் நிலவரம்:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மேற்பரப்பு பொதுவாக மெதுவாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி விரைவான அவுட்ஃபீல்டு காரணமாக அதிக ஸ்கோர் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பின்னர்களும் ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இது பேட்டிங்கிற்கு உகந்த மேற்பரப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர் அடிக்க வாய்ப்பு இருப்பதால், இன்றைய போட்டி த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க: இதற்காக தான் தோனி அப்படி பேசினாரா? வெளியான உண்மை!


டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியில் விளையாடும் 11 பேர் (கணிப்பு):
டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், சர்பராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.


குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியில் விளையாடும் 11 பேர் (கணிப்பு):
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.


மேலும் படிக்க: சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு ஆர்சிபி தான் பெஸ்ட் டீம் - விராட் கோலி ஓபன் டாக்


பட்டையை கிளப்ப காத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ்:
ஐபிஎல் 2023 இன் சீசன் தொடக்க ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி, இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோல்வியை தழுவிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறார்கள்.


முதல் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி அணி?
ரிஷப் பந்த் இல்லாததால், ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் தோல்வியடைந்தது. ரிஷப் பந்திற்கு மாற்றாக டெல்லி அணியில் சரியான பெயர் இல்லை என்றாலும், இருப்பினும் டெல்லி அணியில் திறமை வாய்ந்த ஏராளமான வீரர்கள் உள்ளனர். நடப்பு சாம்பியனுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பற்கு சுவாரஸ்யமாக இருக்கும். 


மேலும் படிக்க: ஐபிஎல் 2023 தொடரில் ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது இவரா...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ