IPL 2023 First Match:  ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின. போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெளலிங்கை தேர்வு செய்தார். இதை அடுத்து, கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே மட்டை வீச களம் இறங்கியது.


மேலும் படிக்க | IPL 2023: இம்பாக்ட் பிளேயர் ரூல்: இவங்களுக்கு இனி வேலை இல்லை - தோனி ஓபன் டாக்


தொடக்க வீரராக களமிறங்கிய டெவோன் கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார். பவர் பிளே ஓவர்களில் எதிர்கொண்ட பந்துகளை அவர் சிக்சர்களிலேயே டீல் செய்தார். இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பவுண்டரி, முதல் சிக்சர் அடித்ததுடன் முதல் அரைசதம் அடித்தார்.


சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குஜராத் அணி வெற்றிபெற 179 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2023: தமிழ் பாடலுக்கு நடனமாடிய தமன்னா - ராஷ்மிகா: பிரம்மாண்டமாக தொடங்கியது


குஜராத் அணி நன்றாக ஆடி வந்த நிலையில், 13 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிறப்பாக ஆடி வந்த விஜய் சங்கர் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. முன்னதாக, குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 179 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் விளாசினார். குஜராத் அணி சார்பாக ரஷீத் கான், முகமது ஷமி மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விளாசினார்கள்.


மேலும் படிக்க | IPL 2023: இம்பாக்ட் பிளேயர் ரூல்: இவங்களுக்கு இனி வேலை இல்லை - தோனி ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ