IPL 2023 LSG vs MI: நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். 10 அணிகளுக்கு இடையேயும் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற பலத்த போட்டியிருந்த நிலையில், குஜராத் அணி நேற்று ஹைதராபாத் அணியை வீழ்த்தி 18 புள்ளிகளை பெற்று, அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்!


குறிப்பாக, 18 புள்ளிகளை பெற்றுள்ளதால் குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் தனது கடைசி போட்டியில் தோற்றாலும் முதலிரண்டு இடங்களில் தான் நீடிக்கும். மும்பை அணி தற்போது 14 புள்ளிகளுடன் கையில் இரண்டு போட்டிகளும் உள்ளதால், அந்த அணியால் மட்டுமே 18 புள்ளிகள் வரை வர இயலும். மற்ற சென்னை அணி, லக்னோ அணிகள் தங்களின் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். 


மேலும் படிக்க | IPL 2023: குவாலிபயர் 1 போட்டிக்கு குஜராத் தகுதி... ஹைதராபாத் படுதோல்வி!


முக்கியமான போட்டி


எனவே, ஒவ்வொரு அணியும் தங்களின் அடுத்தடுத்த போட்டிகளில் அதிக நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் இக்னா ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் லக்னோ - மும்பை போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 


யார் ஜெயித்தால், யாருக்கெல்லாம் பின்னடைவு!


இரு அணிகளும் தங்களின் 13ஆவது லீக் போட்டியில் இன்று விளையாடுகின்றன. மும்பை அணி 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், லக்னோ 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. மும்பை இன்றைய போட்டியில் வென்றால், சென்னை அணியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறும், அதுமட்டுமின்றி பிளேஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிடும். இது, ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். 


லக்னோ வெற்றி பெற்று, அதிக நெட் ரன்ரேட் வைத்திருக்கும்பட்சத்தில் அந்த அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. நெட் ரன்ரேட் குறைந்தால் மூன்றாம் இடம்தான் கிடைக்கும். மேலும், லக்னோவின் வெற்றி  ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு பிளேஆப் கனவை பறித்துவிடும் எனலாம். 


பந்துவீச்சு சுமார்


இத்தகைய கடினமான சூழலில் இப்போட்டி நடைபெற உள்ளது. மும்பை அணியில் சூர்யகுமார் அசூர பார்மில் இருக்கிறார். மிடில் ஆர்டரும் மிரட்டும் வகையில் இருப்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலம் வாய்ந்த அணியாக கருத்தப்படுகிறது. ஆனால், பந்துவீச்சை பொறுத்தவரை இரு அணிகளும் சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசுபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு கைக்கூடும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். 


மும்பை அணி தனது கடைசி போட்டியை ஹைதராபாத் அணியுடனும், லக்னோ கொல்கத்தா அணியுடனும் மோத உள்ளன. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பிளேஆப் வாய்ப்பு எளிதாகும் என்பதை மறுக்க முடியாது. 


மேலும் படிக்க | ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ