IPL 2023: சிக்ஸ் அடித்து போட்டியை முடித்த விராட்... 11 ஆண்டுகளாக தொடரும் மும்பையின் சாபம்
IPL 2023 RCB vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 RCB vs MI: நடப்பு ஐபிஎல் தொடர் முதல் போட்டியில் இருந்தே வழக்கமான பரபரப்புடன்தான் தொடங்கியது. ஹாம் & அவே முறையில் நடக்கும் இந்த தொடரை ரசிகர்களும், வீரர்களுக்கும் பெரும் விருந்தாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில், இத்தொடரின் ஐந்தாவது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடந்தது. இப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
பெங்களூரு டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இஷான் கிஷன் 10 ரன்களிலும், கிரீன் 5 ரன்களிலும், ரோஹித் சர்மா 10 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நான்காவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா இறுதிவரை நின்று 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 84 ரன்களை எடுத்தார்.
ஆர்சிபி சார்பில் கரன் சர்மா 2 விக்கெட்டுகளை எடுக்க, சிராஜ், டோப்லி, ஆகாஷ் தீப், ஹர்சல் படேல், பிரேஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். மேலும், பீல்டிங்கின்போது ரீஸ் டோப்ளியின் தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் பாதிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
மேலும், 172 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு மாஸான தொடக்கத்தை கேப்டன் டூ பிளேசிஸ் - விராட் கோலி ஜோடி அளித்தது. இருவரும் பெஹன்டிராப், ஆர்சர், கிரீன், பியூஷ் சாவ்லா என அடுத்தடுத்து அனைத்து பந்துவீச்சாளர்களையும் பதம்பார்த்தனர். தொடர்ந்து பவுண்டரி மழைகள் பொழிந்தன. ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்து சிறப்பான நிலையில் இருந்தனர்.
அப்போது, 14.5 ஓவரில் டூ பிளேசிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 73 ரன்களை குவித்தார். அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் டக்-அவுட்டானர். இருப்பினும், நான்காவதாக களமிறங்கிய மேக்ஸ்வெல் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து தனது பங்கை ஆற்றினார். இறுதியில் அர்ஷத் கான் வீசிய 17ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து விராட் கோலி ஆட்டத்தை முடித்துவைத்தார்.
அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 82 ரன்களை குவித்தார். இதன்மூலம், 22 பந்துகளை மீதம் வைத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. மேலும், ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைவது வாடிக்கையாகிவிட்டது.
கடைசியாக 2012ஆம் ஆண்டில் அதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோசமான சாதனை இந்தாண்டும் தொடர்ந்துள்ளது. மேலும், நடப்பு தொடரில் அறிமுகமான இம்பாக்ட் பிளேயர் விதியை போட்டியில் பயன்படுத்தாத முதல் அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ