இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை ரசிகர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறந்து விடுவார்கள். ஆனால், இந்திய அணிக்காக விளையாடி பல சரித்திர சாதனைகளை படைத்து, திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி தீர்க்கின்றனர். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர் வேறு யாருமல்ல.. தோனி தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.எஸ்.தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் முதல் டெல்லி, கொல்கத்தா, குஜராத் என எந்த மைதானத்தில் விளையாடினாலும் தோனி ரசிகர்களே அதிகம் இருக்கின்றனர். அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் விதமாக தோனி விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து மைதானத்துக்குள் செல்கின்றனர். இதனால் மைதானம் முழுவதும் மஞ்சள் படையாகவே கட்சியளிக்கிறது. 


மேலும் படிக்க | IPL 2023: பிரப்சிம்ரன் சதத்தால் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளிய பஞ்சாப்... தொரும் டெல்லி துரதிருஷ்டம்!


இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது சிஎஸ்கேயின் சொந்த மைதானமும் கூட. இந்த போட்டியில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். முன்பெல்லாம் ஒன்றிரண்டு ரன்களுக்கு அதிவேகமாக ஓடும் அவரால் இப்போது அந்தளவுக்கு ஓட முடியவில்லை. இதனால், சிக்சர் பவுண்டரிகள் அடிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுகிறார். கடந்த போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 22 ரன்கள் எடுத்தார். 


ஐபிஎல் 2023-ல் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி என்ற பெருமையை பெறும். 


மேலும் படிக்க | RR vs RCB: பிளேஆப் பந்தயத்தில் முன்னேறுமா பெங்களூரு - ராஜஸ்தான் உடன் மோதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ