IPL 2023 LSG vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், பஞ்சாப் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காயத்தால் அவதிப்பட்டு வந்த கேப்டன் ஷிகர் தவாண் மீண்டும் அணியில் இணைந்தார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் ஆரம்பத்தில் இருந்து அதிரடியை காட்டினார். மற்றொரு ஓப்பனர் கேஎல் ராகுல் 12(9) ரன்களில் ஆட்டமிழக்க, ஆயுஷ் பதோனி களமிறங்கினார். 


அவரும் கையில் மேயர்ஸ் உடன் இணைந்து அதிரடி காட்டினார். 6ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் மேயர்ஸ் 54(24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, லக்னோ 74 ரன்களை குவித்திருந்தது. அடுத்து களம் புகுந்த ஸ்டாய்னிஸ் பஞ்சாப் பந்துவீச்சை சுக்குநூறாய் சிதைத்தார். 



பஞ்சாய் பறந்த பந்துகள்


குர்னூர் பிரர் வீசிய 8ஆவது ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. சாம் கரன் வீசிய 10ஆவது ஓவரில் 17 ரன்கள், அவர் வீசிய 12ஆவது ஓவரில் 11 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் வீசிய 14ஆவது ஓவரில் 19 ரன்கள், ரபாடா வீசிய 16ஆவது 16 ரன்கள், அர்ஷ்தீப்பின் 17ஆவது ஓவரில் 16 ரன்கள், ரபாடாவின் 18ஆவது ஓவரில் 19 ரன்கள் என ரன்கள் குவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | சச்சினின் மகனாக அர்ஜூனை பார்க்காதீர்கள்... முன்னாள் மும்பை வீரர் அட்வைஸ்!


இதில், பதோனி 43(24), நிக்கோலஸ் பூரன் 45(19) ஆகியோர் அதிரடி ஒருபுறம் இருக்க, ஸ்டாய்னிஸ் ருத்ரதாண்டவம் ஆடி, 72(40) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதில், 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடக்கம். இதனால், லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 257 ரன்களை எடுத்தது. 


2ஆவது அதிக ஸ்கோர்


இதுவே, ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஆர்சிபி அணி 2013இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக குவித்த 263 ரன்கள் தான் அந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 2016இல் குஜராத் அணிக்கு எதிராக ஆர்சிபி 248 ரன்களை குவித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது இது 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அர்ஷ்தீப், ரபாடா ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி முறையே 54, 52 ரன்களை கொடுத்தனர். ரபாடா 2, அர்ஷ்தீப், சாம் கரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பெற்றனர். 



258 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கினாலும், அதை எளிதில் எட்டிவிடும் விதத்தில்தான் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்கம் சரியாக அமையாதது பின்னடைவானது. ஷிகர் தவான் 1(2), பிரப்சிம்ரன் சிங் 9(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், அதர்வா டைடே, சிக்கந்தர் ராஸா உடன் சேர்ந்த நல்ல பார்டனர்ஷிப் அமைத்தார். 


போராடி தோல்வி 


இதில் ராஸா 36(22) ரன்களிலும், டைடே 66(36) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டைடே 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளை குவித்தார். அடுத்து, லிவிங்ஸ்டன் 23(16), சாம் கரன் 21(11), ஜித்தேஷ் சர்மா 24(10) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் அனைவரும் விக்கெட்டை தாரைவார்க்க, 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 



இதன்மூலம், லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவிற்கு 9 வீரர்கள் பந்துவீசினர். ஸ்டாய்னிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 1.5 ஓவர்களை மட்டும் வீசினார். மீதம் இருந்த ஒரு பந்தை பதோனி வீசினார். லக்னோ பந்துவீச்சில் யாஷ் தாக்கூர் 4, ஆவேஷ் 3, ரவி பிஷ்னோய் 2, ஸ்டாய்னிஸ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகனாக தேர்வானார். 


புள்ளிப்பட்டியல்


லக்னோ அணி 8 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 3 தோல்வி) 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்திலும், பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி (4 வெற்றி, 4 தோல்வி) 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளன. சென்னை அணி 10 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | அடுத்த சீசனில் அபார விலைக்கு ஏலம் போகப்போகும் இந்தியாவின் இளம் கிரிக்கெட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ