நடப்பு ஐபிஎல் தொடர் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்றிருக்கும் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்திருக்கிறது. மற்ற 3 இடங்களுக்கு 7 அணிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை இழந்துவிட்டன. இதனால், இன்றைய போட்டியின் முடிவு மும்பை - லக்னோ அணிகளுக்கான பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, மற்ற அணிகளின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தீர்மானிக்கும். இதனால், இன்றைய போட்டியை மற்ற அணிகளும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்!


இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில்  மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4வது இடத்திலும் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் தலா 2 போட்டிகள் எஞ்சியிருக்கிறது. மும்பை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிடலாம். 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு மிக குறைவு. இரண்டிலும் வெற்றி பெற்றால் குவாலிஃபையர் ஒன்றில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடும். 


அதேபோல் லக்னோ அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நுழைந்துவிடலாம். 4 அணிகள் ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு என்பது சிக்கலுக்குள்ளாலும். இரண்டிலும் தோற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயம் முன்னேற முடியாது. இப்படியான இடியாப்ப சிக்கலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களின் சொந்த மைதானமான லக்னோவில் எதிர்கொள்கிறது.


மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் செம ஃபார்மில் இருக்கிறது. ரோகித் சர்மாவை தவிர இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேம்ரூன் கிரீன் என அதிரடி மன்னர்கள் நிறைந்த படையாக இருக்கிறது. அனைவரும் ஃபார்மில் இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு இணையாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பேட்டிங்கில் செம ஃபார்மில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இக்கட்டான நிலைமையில் இருந்து இமாலய இலக்கை அசால்டாக சேஸ் செய்து பிரம்மிக்க வைத்தனர். இரு அணிகளுமே பவுலிங்கிலும் சமமாக இருப்பதால் சுவாரஸ்யதுக்கு பஞ்சம் இருக்காது. 


மேலும் படிக்க | ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ