’அவர் மேல நம்பிக்கை இருந்துச்சு.. செம பிளேயர்’ - நிதீஷ் ராணா புகழாரம் சூட்டிய கேகேஆர் பிளேயர்
ஈடன் கார்டனலில் ரஸ்ஸலுக்காக ரசிகர்கள் கத்தியதை கேட்டிருக்குறேன், ஆனால் முதன்முறையாக ரிங்கு சிங் ரிங்கு சிங் என ரசிகர்கள் கத்தியது என்னை வியப்பில் ஆழ்த்தியது என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலில் பேட்டிங்
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் நித்திஷ் ராணா இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஆனால் இவர்களால் கடைசி வரை நின்று பினிஷ் செய்து கொடுக்க முடியாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.
ரிங்கு சிங் நாயகன்
கடைசியில் வந்த ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர். இதில் ரஸ்ஸல் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரிங்கு சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். கடைசி ஓவர் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து போட்டியை கொல்கத்தா அணிக்காக மீண்டும் ஒருமுறை அபாரமாக ஃபினிஷ் செய்து கொடுத்தார் ரிங்கு சிங். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?
நிதீஷ் ராணா மகிழ்ச்சி
வெற்றி குறித்து பேசிய கேப்டன் நிதீஷ் ராணா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் ரிங்கு சிங்குக்கு பாராட்டு தெரவித்தார். அவர் பேசும்போது, நான் பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட் விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். வெங்கடேஷ் ஐயருக்கு காலில் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் அவர் நேரம் எடுத்துக்கொள்ளட்டும், நான் ஒரு சில ஓவர்கள் பெரிய ஓவர்களாக மாற்ற வேண்டும் என்று அதிரடியாக விளையாடினேன். இதுதான் என்னுடைய அணுகுமுறைக்கு காரணம்.
ஃபார்முக்கு திரும்பிய ரஸ்ஸல்
கிட்டத்தட்ட 10 போட்டிகளாக ரஸ்ஸல் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருந்ததற்கு காரணம், அவரிடமிருந்து ஒரு போட்டி அதிரடியாக வந்து விட்டால் ஆட்டம் மொத்தமாக மாறிவிடும். அவரும் பார்மிற்கு வந்து விடுவார் என்று எண்ணினேன். இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ரஸ்ஸல் பார்மில் வருவதற்கு திணறுகிறார். சரியாக பினிஷ் செய்ய முடியவில்லை என்றால் ரிங்கு சிங் அந்த ரோலுக்கு சரியாக இருப்பார். இறங்கிய முதல் பந்தில் இருந்தே அடிக்கக்கூடிய திறமை பெற்றவர் என்பதால், அவரை சீசனின் ஆரம்பத்தில் இருந்தே பினிஷிங் ரோலில் இறங்க வைக்கலாம் என்று அணி நிர்வாகத்திடம் ஆலோசித்து முடிவு செய்தோம்.
ரிங்கு சிங்குக்கு புகழாரம்
இந்த சீசன் துவக்கத்திலேயே ரிங்கு சிங்கிடம், நீ விளையாடுவாய், தயாராக இரு என கூறியிருந்தேன். 5 சிக்ஸர்கள் அடித்த பிறகும், பல வீரர்கள் செய்ய முடியாததை நீ செய்து காட்டினாய். ஆகையால் நீ உன்னை நம்பி, தொடர்ந்து இதே ஆட்டத்தை வெளிப்படுத்து என்றும் கூறினேன். சமீபகாலமாக அவர் செயல்பட்டு வரும் விதம் மிகுந்த பெருமையாக இருக்கிறது. ரிங்கு சிங் பேட்டிங் செய்யும் பொழுது மைதானத்தில் ரசிகர்கள் ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கரகோஷம் எழுப்பினர். நான் பல வருடங்களாக கொல்கத்தா அணியில் இருக்கிறேன். ஈடன் கார்டனில் ரசிகர்கள் ‘ரஸ்ஸல்..ரஸ்ஸல்’ என்று கரகோஷம் எழுப்பி கேட்டிருக்கிறேன். இப்போது ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கரகோஷம் எழுப்புகிறார்கள். இது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது என்றார்.
மேலும் படிக்க | தோனி எப்போது ஓய்வு என என்னிடம் சொல்லிவிட்டார்: சுரேஷ் ரெய்னா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ