ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி யாருக்கு?
RR vs LSG Dream11 Prediction: இன்றைய ஆட்டத்தில் வேற்வெற்றி யாருக்கு சாதகமாக இருக்கும்? இரு அணிகளிலும் காலம் இறங்கும் அந்த 11 வீரர்கள் யார்? ஐபிர்ல் புள்ளி பட்டியல் விவரங்கள், பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் அறிந்துக்கொள்க.
RR vs LSG Dream11 Prediction: இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) தொடரின் 26வது போட்டியில், இன்று (ஏப்ரல் 19, புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதவுள்ளன. இளம் மற்றும் சற்று மாற்றுயோசிக்கும் கேப்டன்சி பாணிகளைக் கொண்ட கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தலைமையில் இன்றைய அணிகள் ஆடுகளத்தில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளதால், யாருடைய கேப்டன்சி வியூகங்கள் வெற்றியை தேடித்தரும் என்பதைக் காண்பதற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய ஆட்டம் பிங்க் சிட்டி என அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.
ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை:
ராகுல் மற்றும் சாம்சன் இருவரும் தங்கள் அணியில் உள்ள திறமையான வீரர்களை சரியாகப் பயன்படுத்தி விளையாடுகிறார்கள். இருப்பினும், ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் ராஜஸ்தான் அணியை விட லக்னோ அணி ஒருபடி தள்ளி சற்று கீழே உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிக புள்ளிகள் மற்றும் அதிக நிகர ரன்ரேட் விகிதத்தைக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்த ஒரே அணியாகும். இதன்காரணமாக ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐந்து போட்டி நான்கில் வெற்றி - புள்ளிகள் 8
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஐந்து போட்டி மூன்றில் வெற்றி - புள்ளிகள் 6
ஆர்ஆர் vs எல்எஸ்ஜி போட்டி குறித்த தகவல்கள்:
- இடம்: சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்
- தேதி & நேரம்: புதன், ஏப்ரல் 19, இரவு 7:30.
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
மேலும் படிக்க: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?
சவாய் மான்சிங் ஸ்டேடியம் ரிப்போர்ட்:
ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டம் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் இன்று நடைபெறுகிறது. இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 166 என்ற இலக்கை துரத்தி இந்தியா வெற்றி பெற்றது. இங்கே ஒரே ஒரு டி20 போட்டி மட்டுமே விளையாடப்பட்டு உள்ளது. இந்த ஆடுகளம் ஒரு நல்ல பேட்டிங் டிராக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் ஓரளவுக்கு விக்கெட் கிடைக்கும். ஆடுகளத்தின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு, டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நேருக்கு நேர்:
- விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை: 2
- ராஜஸ்தான் ராயல்ஸ் வென்ற போட்டிகள்: 2
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வென்ற போட்டிகள்: 0
- சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகள்: 0 (RR 0, LSG 0)
- லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் சராசரி ரன்கள்: 172
- ராஜஸ்தான் அணிக்கு எதிராக லக்னோ அணியின் சராசரி ரன்கள்: 158
மேலும் படிக்க: வரா கொண்டாடாதீங்க விராட் கோலி - 10% பைன் போட்ட பிசிசிஐ: இதுதான் காரணம்..!!
RR vs LSG: எந்த அணி வெற்றி பெறும்?
இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் எந்த அணி வெற்றி பெறும் எனக் கணிப்பதில் சிக்கல் இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற விக்கெட் மற்றும் வேகமான அவுட்ஃபீல்ட் சாதகமாக இருப்பதால் சேஸிங் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இரு அணியிலும் விளையாடக்கூடிய 11 பேர் (கணிப்பு)
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்) தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG): கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ