IPL Playoffs 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது நிறைவடைந்துவிட்டன. கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய லீக் சுற்றில், 70 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 10 அணிகளும் கடுமையாக போட்டியிட்ட நிலையில் தற்போது 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மே 23ஆம் தேதி குவாலிஃபயர் 1 போட்டியும், மே 24ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன. தொடர்ந்து, மே 26ஆம் தேதி குவாலிஃபயர் 2 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற இருக்கின்றன. 


மே 20ஆம் தேதி நிலவரப்படி, குஜராத், சென்னை, லக்னோ உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த நிலையில், நான்காவது இடத்திற்கான மும்பை, பெங்களூரு அணி இடையே தான் கடுமையான போட்டி இருந்தது எனலாம். 


மேலும் படிக்க | IPL 2023: சென்னை அணி அபார வெற்றி - மாஸா...கிளாஸா பிளே ஆஃப்-க்கு தகுதி


அந்த வகையில், மே 21ஆம் தேதி மாலை நடைபெற்ற மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாச்தில் வென்று நான்காவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இதனால், இரவு நடைபெற்ற குஜராத் உடனான போட்டியில் வெற்றி பெற்ற ஆக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி இருந்தது. 


டாஸை இழந்த பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பணித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர் விராட் கோலி மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடினார். அவர் 101 ரன்களை குவித்த நிலையில், பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்களை எடுத்தது. மேலும், விராட் கோலிக்கு இது 7ஆவது சதமாகும். 


இதைத் தொடர்ந்து, களமிறங்கிய குஜராத்துக்கு சுப்மன் கில் சிம்மசொப்பனமாக விளங்கினார். சாஹா விரைவாக ஆட்டமிழக்க, இம்பாக்ட் சப்பாக வந்த விஜய் சங்கர், கில் உடன் சேர்ந்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவரும் அரைசதம் அடித்த ஆட்டமிழக்க, மற்றவர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இருப்பினும், 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று, பெங்களூருவை வெளியேற்றியது. கடந்த போட்டியை போலவே, கில் இதிலும் சதம் அடித்து மிரட்டினார்.



பெங்களூரு அணி வெளியேறியதை அடுத்து பிளேஆப் சுற்றுக்கு மும்பை தகுதிபெற்றது. இதன்மூலம், மும்பை அணி மே 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியுடன் மோத உள்ளது. முன்னதாக நாளை நடைபெறும் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை அணியை சென்னை அணி சந்திக்கிறது. 


மேலும் படிக்க | IPL 2023: கிரீன் சதம்... மும்பை வெற்றி - பிளேஆப் செல்ல இது போதுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ