IPL 2023: இந்த வீரர் எங்களை ஏமாற்றிவிட்டார்.. இனி வாய்ப்பு கொடுக்கமாட்டோம்: ரிக்கி பாண்டிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நம்பிக்கை வைத்த இந்திய இளம் வீரர் ஒழுங்காக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
ஐபிஎல் 2023-ல் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து 6வது போட்டியில் வெற்றி பெற்றது. இதுவரை 2 வெற்றிகள் பெற்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இனி ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் அந்த அணி ஐபிஎல் தொடரின் குவாலிபையருக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது. இது குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தாங்கள் அதிகம் நம்பிய இந்திய இளம் பிரித்திவி ஷா வீரர் ஏமாற்றிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த சீசனிலும் அவர் சிறப்பாக ஆடவில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரிக்கி பாண்டிங்.
பிரித்திவி ஷா மீது அதிருப்தி
கடந்த சீசனிலும் பிரித்திவி ஷா ஒழுங்காக விளையாடவில்லை. கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரிலாவது சிறப்பாக விளையாடவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அப்படியான ஆட்டம் எதுவும் அவரிடம் இருந்து வரவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவருடன் ஒப்பிடும்போது மற்ற அணிகளில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்தந்த அணிகளுக்கு வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?
டாப் ஆர்டர்கள் சொதப்பல்
ஆனால் டெல்லி அணியில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அணியின் தொடர் தோல்விக்கு டாப் ஆர்டர்களின் மோசமான ஆட்டமே காரணமாக இருக்கிறது. ஆனால் பிரித்திவி ஷா மேட்ச் வின்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் பார்முக்கு திரும்பினால் போட்டியை வெல்லலாம். அவரும் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். வலைப்பயிற்சியிலும் சிறப்பாக ஆடினார். அவருடைய செயல்பாட்டை பார்த்து இந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்த்தேன். என் நம்பிக்கை வீண் போய்விட்டது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 6 போட்டிகளில் இந்த ஆண்டு விளையாடிய பிரித்திவி ஷா வெறும் 47 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எய்டன் மார்கிரம் நம்பிக்கை
அதேபோல் சன்ரைசர்ஸ் அணியும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண்டு இதுவரை சிறப்பாக ஆடவில்லை. அவர்களும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களிலேயே இருக்கின்றனர். இன்று நடைபெறும் லீக் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களும் குவாலிஃபையருக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால், எஸ்ஆர்ஹெச் அணியும், டெல்லி அணியை வீழ்த்தும் முனைப்பில் இருக்கிறது. இரு அணிகளுமே அதே எண்ணத்தில் இருப்பதால் யார் தோல்வி பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சிங் மீது 2 FIR பதியப்பட்டது! போக்சோவும் பாய்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ