WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சிங் மீது 2 FIR பதியப்பட்டது!போக்சோவும் பாய்ந்தது

POSCO On WFI chief Brij Bhushan: WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 28, 2023, 11:25 PM IST
  • இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார்கள்
  • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாருக்கு 2 எஃப்.ஐ.ஆர் பதிவானது
  • போக்சோவின் கீழ் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு
WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சிங் மீது 2 FIR பதியப்பட்டது!போக்சோவும் பாய்ந்தது title=

நியூடெல்லி: WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மாநாகர காவல் ஆணையர் பிரணவ் தயல் தெரிவித்தார். முன்னதாக, மல்யுத்த வீரர்கள் 7 புகார்களை அளித்துள்ளதாகவும், அவை விசாரிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததால்,டெல்லி மகளிர் ஆணையம் (DCW) காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

தற்போது இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதல் எஃப்.ஐ.ஆர், பாதிக்கப்பட்ட மைனர் ஒருவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானது, இது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வரம்பு மீறுவது தொடர்புடைய ஐபிசி பிரிவுகளுடன். இரண்டாவது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வயது வந்தோர் புகார்தாரர்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அது தொடர்பான தொடர்புடைய பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கையை அளித்துவிட்டது.  

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அறிக்கையை பகிரங்கப்படுத்தவும் இல்லை, அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ப்னதால், இந்திய மல்யுத்த வீரர்கள் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடங்கினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: அர்ஷ்தீப் சிங்கின் அசுர வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை உடைந்த ஸ்டம்புகள் - வீடியோ

அதோடு, விளையாட்டு வீரர்கள் கபில் தேவ், சானியா மிர்சா, இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங், உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கும் தயார் என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் சவால் விட்டுள்ளார்.

மேலும் படிக்க | டிரம்ப் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை! முன்னாள் அதிபரை எச்சரித்த நீதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News