IPL Qualifier 2: நடப்பு ஐபிஎல் தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இறுதிப்போட்டி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், தனது எதிரணிக்காக காத்திருக்கும் நிலையில், எதிரணியை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2 போட்டி இன்று நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் மோதியது. குஜராத் அணி, சென்னை அணியிடம் கண்ட தோல்வியில் இருந்து மீண்டு சாம்பியன்ஷிப்பை தக்கவைக்கவும், தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து, 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல மும்பை அணியும் பெரும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்கின. 



குஜராத் அணி தனது சொந்த மண்ணான இந்த மைதானத்தில் வலுவாக காணப்படுகிறது. அதுவும் அந்த அணியின் சேஸ்ஸிங்கை தடுப்பது அவ்வளவு எளிதில்லை என்பதால், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி உடனே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக கூறி, குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 


இதில், சுப்மன் கில் - சாஹா ஜோடி வழக்கம்போல் பவர்பிளேவில் பவர் காட்டின. தொடர்ந்து, பவர்பிளே முடிந்து 7ஆவது ஓவரில் சாஹா 18(16) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கில் - சுதர்சன் மும்பை அணியின் பந்துவீச்சு கட்டுக்கோப்பை சீர்குலைத்தது.  


மேலும் படிக்க | ஒரு வழியாக விராட் கோலி குறித்து மனம் திறந்த லக்னோ வீரர் - என்ன சொன்னார் தெரியுமா?


சாவ்லாவின் 9ஆவது ஓவரில் 16 ரன்கள், ஆகாஷ் மத்வால் வீசிய 12ஆவது ஓவரில் 21 ரன்கள், 13ஆவது ஓவரில் 20 ரன்கள், 15ஆவது ஓவரில் 19 ரன்கள், 16ஆவது 17 ரன்கள், 17ஆவது 15 ரன்கள் என ரன் மழையை பொழிந்தார் சுப்மன் கில். அவர் 49ஆவது பந்திலேயே சதம் அடித்து, தொடரில் மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த பின்னரும் அவர் அதிரடியை தொடர்ந்து, 60 பந்துகளில் 10 சிக்ஸர், 7 பவுண்டரிகளை அடித்து 129 ரன்களுக்கு மத்வால் ஆட்டமிழந்தார்.



சாய் சுதர்சன் 43 ரன்களை எடுத்தபோது, கடைசி ஓவரில் அவர் ரிட்டையர்ட்  அவுட்டானார். இதனால், களத்திற்கு ரஷித் கான் வந்து சற்று அதிரடி காட்ட முனைந்தார். ஹர்திக் பாண்டியாவும் ஒரு சில பவுண்டரிகளை குவிக்க கடைசி ஓவரில் 19 ரன்கள் குவிக்கப்பட்டது. 


இதனால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் 233 ரன்களை எடுத்தது. பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் மத்வால், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். மும்பை அணி சென்னையுடன் இறுதிப்போட்டியில் விளையாட 234 ரன்களை எட்ட வேண்டும்.  


மேலும் படிக்க | IPL 2023: பத்திரனா குடும்பத்திடம் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ