IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மாலை நடைபெற்ற போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அதன்மூலம், பெங்களூரு தனது இரண்டாவது வெற்றியை உறுதிசெய்ய, டெல்லி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை பதிவுசெய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இரவு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதின. பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும், பஞ்சாப் அணி கேப்டன் தவாண் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட வில்லை. சாம் கரன் கேப்டன் பொறுப்பை வகித்தார். 


மேலும் படிக்க | தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக்


முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு, கைல் மேயர்ஸ் - கேஎல் ராகுல் சற்று நல்ல தொடக்கத்தை அளித்தது. கைல் மேயர்ஸ் 29(23) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் கே.எல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று அரைசதம் தாண்டினார். அவர் 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. பஞ்சாப் சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், ராசா, பிரர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அறிமுக வீர்ர டைடே 0, பிரப்சிம்ரன் சிங், 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் புகுந்த ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா சற்று நேரம் தாக்குப்பிடித்தது. ஷார்ட் 34(22) ரன்களில் ஆட்டமிழக்க, ராஸா களம் புகுந்தார். தொடர்ந்து, பாட்டியா 22(22), சாம் கரன் 6(6), ஜித்தேஷ் சர்மா 2(4) ரன்களுக்கு ஆட்டமிழக்க ஷாருக்கான் களம்கண்டார். 


சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான் ஜோடி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது. குறிப்பாக, ஷாருக்கான் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து மிரட்டினார், அதுவும் அதிவேக மார்க் வுட் பந்துவீச்சில். அரைசதம் கடந்த சிக்கந்தர் ராஸா, ரவி பீஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 19ஆவது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸர் அடிக்க, பிரர் ஒரு பவுண்டரி எடுத்து ஆட்டமிழந்தார். 



இதனால், கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ரவி பீஷ்னோய் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ஷாருக்கான் இரண்டு டபுள்ஸ் ஓட, மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம், பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து, லக்னோவை வீழ்த்தியது. ஷாருக்கான் 15 (7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்க் வுட், யுத்விர் சிங், ரவி பீஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 



பஞ்சாப் அணிக்காக 41 பந்தில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்த சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து, நான்காவது இடத்தை பிடித்தது. லக்னோ அணி அதே மூன்று வெற்றி, 1 தோல்வியுடன் 2ஆம் இடத்தில் நீடிக்கிறது. 


மேலும் படிக்க | IPL 2023: கொல்கத்தாவை இந்த முறை காக்க தவறினார் ரிங்கு சிங்... ஹைதராபாத் வெற்றி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ