ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திங்கள்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 227 ரன்களை இலக்கை அந்த அணியால் எட்ட முடியவில்லை. முடிவில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக RCB அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவின் விக்கெட்டை விராட் கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். பெங்களுரு அணியின் பந்துவீச்சை அதிரடியாக அடித்துக் கொண்டிருந்த அவர், அரைசதத்துக்குப் பிறகு கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த விராட் கோலி, அந்த விக்கெட்டுக்கு ஆக்ரோஷமான மகிழ்ச்சியை மைதானத்தில் வெளிப்படுத்தினார். அது ஐபிஎல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் போட்டி நடுவர், அவருக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தார். அதன்படி போட்டிக் கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | கடைசி பந்து வரை ட்விஸ்ட்! பெங்களூரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே!


இது குறித்து ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை விராட் கோலி ஒப்புக்கொண்டார். லெவல் 1 நடத்தை விதிகளை மீறினால், மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது என்பதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறையின்படி விராட் கோலியிடம் எந்த விளக்கமும் கேட்கப்படாது, விசாரணையும் நடைபெறாது. இதற்கு அடுத்தகட்ட விதிமீறல் என்றால் மட்டுமே போட்டி கட்டணம் முழுமையாக ரத்து மற்றும் விசாரணை எல்லாம் நடைபெறும்.   



அதேநேரத்தில் விராட் கோலி இந்த போட்டியில் சிறப்பாகவும் விளையாடவில்லை. இருப்பினும் மேக்ஸ்வெல் மற்றும் டூப்பிளசிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டிவிடும் தூரத்தில் ஆர்சிபி இருந்தது. ஆனால் அவர்களின் ஆட்டமிழப்புக்குப் பிறகு வந்த அந்த அணி வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவ நேரிட்டது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாப் 4-க்குள் நுழைந்துவிட்டது.


மேலும் படிக்க | IPL CSKvsRCB: தோனிக்கு முழங்கால் காயம்.. ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ