IPL 2023 MI vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது எனலாம். தொடரின் 69ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. சன்ரைசர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. மும்பை அணி பிளேஆப் ரேஸில் உள்ளதால் இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓப்பனர்கள் மிரட்டல்


டாஸை வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வான்கடேவில் சேஸ்ஸிங் செய்ய ஏதுவாக இருப்பதால் இந்த முடிவை கேப்டன் ரோஹித் சர்மா எடுத்தார். இதையடுத்து, பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கம் அமைந்தது எனலாம். ஓப்பனர்களாக களமிறங்கிய விவரண்ட் சர்மா - மயாங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 


இந்த ஜோடி 13.5 ஓவர்களில் 140 ரன்களை சேர்த்தது. விவரண்ட் சர்மா 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய அகர்வால், 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, பிளிப்ஸ் 1, கிளாசென் 18, ப்ரூக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. கேப்டன் மார்க்ரம் 13 ரன்களுடனும், சன்விர் சிங் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆகாஷ் மாத்வால் 4 விக்கெட்டுகளையும், ஜோர்டன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


மேலும் படிக்க | IPL 2023: சென்னை அணி அபார வெற்றி - மாஸா...கிளாஸா பிளே ஆஃப்-க்கு தகுதி


ரோஹித் - கிரீன் அசத்தல்


இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. மேலும், நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் அந்த அணி விளையாடியது. ரோஹித் சர்மா சற்று அதிரடி காட்டினாலும், இஷான் கிஷன் நிதானம் காட்டி வந்தார். அந்த சூழலில், மூன்றாவது ஓவரில் கிஷான் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 


இதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் கேம்ரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை அணிக்கு ரன்களை வாரி குவித்தது. கிரீன் சிக்ஸர் மழையை பொழிய, ரோஹித்தும் அதிரடி காட்டினார். இந்த ஜோடி சுமார் 10 ஓவர்களில் 128 ரன்களை குவித்து அதிரடி காட்டியது. 


ரோஹித் சர்மா 37 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 56 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அப்போதும், கிரீன் தனது அதிரடியை தொடர்ந்தார். அடுத்த வந்த சூர்யகுமாரும் சில பவுண்டரிகளை குவித்தார். கிரீனின் அதிரடியால் 18 ஓவர்களில் இலக்கை அடைந்தது. மேலும், கிரீன் தனது முதல் டி20 சதத்தையும் அதில் பதிவுசெய்தார். கிரீன் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். 


யாருக்கு வாய்ப்பு?


மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தற்போது 16 புள்ளிகளுடன் -0.044 என்ற நெட் ரன்ரேட்டுடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருந்தாலும், அடுத்த நடைபெற உள்ள பெங்களூரு - குஜராத் போட்டியில், பெங்களூரு வெற்றி பெற்றால் மும்பை அணி பிளேஆப் வாய்ப்பை இழந்து, பெங்களூரு தகுதிபெறும். 


ஏனென்றால், பெங்களூரு அணி நல்ல நெட் ரன்ரேட்டுடன் உள்ளது. மாறாக பெங்களூரு தோல்வியடைந்தால் மும்பை நேரடியாக தகுதிபெறும் என தெரிகிறது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. 


மேலும் படிக்க | IPL 2023: மும்பை vs பெங்களூர்! பிளே ஆஃப்க்கு தகுதி பெற யாருக்கு அதிக வாய்ப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ