IPL 2023: `என்னை ஓட வைக்காதீர்கள்...` தோனியின் கண்டீஷனுக்கு காரணம் என்ன?
IPL 2023: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, தன்னை அதிகமாக களத்தில் ஓட வைக்காதீர்கள் என சக வீரர்களுக்கு தான் அறவுறுத்தியுள்ளதாக கூறினார். இதுகுறித்த முழு விவரத்தை இதில் காணலாம்.
MS Dhoni: நடப்பு ஐபிஎல் தொடரின் 56ஆவது போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிவம் தூபே 25(12), ருதுராஜ் 24(18), அம்பதி ராயுடு 23(17), ஜடேஜா 21(16), ரஹானே 21(20) என அனைவரும் 25 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் களமிறங்கிய தோனியும் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 20 ரன்களை குவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. டெல்லி சார்பில் மிட்செல் மார்ஷ் 3, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ், கலீல் அகமது, லலித் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரில் இருந்தே சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டனர். பவர்பிளே ஓவர்களிலேயே டேவிட் வார்னர் 0(2), பில் சால்ட் 17(11), மிட்செல் மார்ஷ் 5(4) என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதில், மிட்செல் மார்ஷ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டான நிலையில், மற்ற இருவரும் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்த சற்று நிலைத்து நின்று விளையாடிய ரிலே ரூசோ - மணீஷ் பாண்டே ஜோடி சுமார் 10 ஓவர்கள் வரை இணைந்து 59 ரன்களை எடுத்தனர். மணீஷ் பாண்டே 27(29), ரிலே ரூசோ 35(37) என ஆட்டமிழக்க சிஎஸ்கேவின் வெற்றி பாதி முடிவாகிவிட்டது. அக்சர் படேல் ஒருமுனையில் போராடினார்.
ஒருகட்டத்தில் அக்சர் படேல் 21(12), ரிபல் படேல் 10(16) ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகளை தொடர்ந்து அடித்த லலித் யாதவ் அதன் அடுத்த பந்திலேயே பதிரானா பந்தில் போல்டாகி வெளியேறினார். இதில் டெல்லி அணி 140 ரன்களை மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பதிரானா 3, சஹார் 2, ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வானார்.
போட்டிக்கு பின், தோனியிடம் அவரது பேட்டிங் குறித்தும், சிஎஸ்கே வெற்றி குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, ஒரு சில பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட போதிலும், 200 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்வது பற்றி கேட்கப்பட்டபோது,"இதுதான் எனது வேலை. இதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன், என்னை நிறைய ஓட வைக்காதீர்கள் என்று. அது வேலை செய்துள்ளது. இதைத்தான் நான் செய்ய வேண்டும், அதாவது வேகமாக ரன் அடிப்பது. மேலும், அணிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி.
போட்டியின் கடைசி கட்டத்தை நெருங்க நெருங்க, ஒவ்வொருவரும் சில டெலிவரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கீழ் வைத்திருப்பது முக்கியம். எங்கள் பேட்டிங்கில் நாங்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும். நான் மிட்செல் சான்ட்னரை அணிக்கு வர விரும்பினேன். அவர் ஒரு பந்து வீச்சாளர், அவர் புதிய பந்தில் பிளாட் விக்கெட்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் சீம்-ஐ அடித்து நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்கிறார், அவர் ஸ்கோரை அடிக்க ஆரம்பித்தவுடன் மற்ற பேட்டர்கள் மிகவும் சிரமமின்றி இருக்கிறார்.
அவர் ஸ்ட்ரைக் ரோடைட் செய்வதை விரும்புவார். அவருக்கு விளையாட்டு குறித்த விழிப்புணர்வு உள்ளது. அவர் தன்னை மாற்றியமைக்க தயாராக இருக்கிறார். உங்களுக்கு அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிது. விளையாட்டைப் படிக்கும் நபர்கள், உங்கள் அணியில் உங்களுக்குத் தேவையான வீரர்களாக இருப்பார்கள்" என்றார்.
மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ