IPL அணிகள் ஏலத்தை மிஞ்சிய WPL... மகளிர் அணிகளின் ஏலத்தொகை முழு விவரம்!
ஐபிஎல் போன்று மகளிர் விளையாடும் WPL தொடரின் 5 அணிகளுடைய ஏலத்தொகை மற்றும் அதனை வாங்கியுள்ள நிறுவனங்கள் குறித்து இங்கு தெரிவித்துகொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) எனப்படும் டி20 லீக் தொடர், கிரிக்கெட் உலகில் தற்போது தனி சாம்ராஜ்யத்தையே எழுப்பியுள்ளது. கோடிக்கணக்கிலான ரசிகர்கள், வணிகம் தாண்டி கிரிக்கெட் விளையாட்டிலும் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது, ஆடவர்கள் மட்டுமே விளையாடிய வந்த இத்தொடரை, மகளிரும் விளையாடும் வகையில் புதிய டி20 தொடரை பிசிசிஐ அறிமுகப்படுத்த எண்ணியது. மகளிர் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் இந்த தொடர், நடப்பாண்டு முதல் விளையாடப்பட உள்ளது. ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் 5 அணிகள் விளையாட உள்ளன.
அந்த வகையில், ஐந்து அணிகளுக்கான ஒட்டுமொத்த ஏலமும் இன்று நிறைவடைந்துள்ளது. 5 அணிகளை வாங்கியவர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 5 அணிகளும் மொத்தம் ரூ. 4 ஆயிரத்து 670 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணி! இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் யார் தெரியுமா?
புரட்சிக்கரமான தொடக்கம்
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடரிலேயே இத்தகைய தொகை கிடைத்துள்ளதாகவும், 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது அனைத்து அணிகளின் (அப்போது 8 அணிகள்) ஏலத்தொகையையும் இது மிஞ்சிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,"இது மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புரட்சிக்கரமான தொடக்கத்தை அளித்துள்ளது. நமது வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டின் சகோதரத்துவத்திற்கும் ஒரு மாற்றத்திற்கான பயணத்திற்கு வழி வகுக்கிறது.
மகளிர் பிரீமியர் லீக், பெண்கள் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும். ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயனளிக்கும் அனைத்தையும் பிசிசிஐ உறுதி செய்யும்" என குறிப்பிட்டுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் (Women's Premier League) என்ற பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
5 அணிகள் - ஏலத்தொகை
மேலும், 5 அணிகளை வாங்கிய பங்குதாரர்கள் குறித்த விவரங்களை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், அகமதாபாத் அணியை அதானி ஸ்போர்ஸ்லைன் நிறுவனம் 1,289 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மும்பை அணியை, இந்தியாவின் ஸ்போர்ஸ் நிறுவனம் 912.99 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 901 கோடிக்கு ரூபாய்க்கும், டெல்லியை அணியை JSW GMR கிரிக்கெட் நிறுவனம் 810 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணியை 757 கோடி ரூபாய் கொடுத்து, கேப்ரி கிளோபல் ஹோல்டிங் நிறுவனம் வாங்கியுள்ளது.
Viacom18 ஏற்கனவே 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை, மகளிர் பிரீமியர் லீக் ஒளிபரப்பு உரிமையை ரூ.951 கோடிக்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு போட்டியின் மதிப்பு என்பது ரூ. 7.09 கோடி ஆகும்.
மேலும் படிக்க | தோனி குறித்து டிராவிட் பகிர்ந்த முக்கியமான விஷயம்: இஷான் கிஷனுக்கு வாய்ப்பு ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ