ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள ஐபிஎல் 2020 தொடர்.. அனுமதி கேட்கும் பி.சி.சி.ஐ.
இன்னும் 10 நாட்களில் IPL தொடர் குறித்து ஒரு நல்ல முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது டெல்லி: இந்த வருடம் நடைபெறவிருந்த டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டதன் மூலம், முழு அளவிலான ஐ.பி.எல். தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) முடிவு செய்துள்ளது. அதற்கான முயற்சியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களில் IPL தொடர் குறித்து ஒரு நல்ல முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COVID-19 தொற்றுநோயால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ஐ.சி.சி எடுத்த முடிவால், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரை ஐ.பி.எல் தொடர் நடத்த சாத்தியமாகி உள்ளது.
ஐபிஎல் கவுன்சில் கமிட்டி (IPL GC) நிர்வாக குழு, ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் சந்தித்து அனைத்து முடிவுகளும் (இறுதி அட்டவணை உட்பட) எடுக்க உள்ளது. இப்போதைக்கு, 60 ஆட்டங்களை உள்ளடக்கிய முழு அளவிலான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் திட்டம் என்று படேல் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் கூறினார்.
ALSO READ | கொரோனா காரணமாக ICC டி-20 உலக கோப்பை ஒத்திவைப்பு.. IPL 2020 தொடர் உறுதி
தற்போதைய சூழ்நிலையில் தொடரை நடத்துவதில் உள்ள முக்கிய சவால்களைப் பற்றி கேட்டதற்கு, படேல் "எப்படி இருந்தாலும், ரசிகர்கள் மைதானத்திற்கு வரபோவதில்லை, கூட்டம் இல்லாமல் தான் நடக்கப்போகிறது எனக் கூறினார்,
டி 20 உலகக் கோப்பையை (ICC T20 World Cup) குறித்து ஐ.சி.சி அறிவிப்புக்கு முன்பே ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தொற்றுநோய்க்கு மத்தியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள். அணியின் வீரர்களை போட்டிக்கு தயார் செய்ய குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை தேவைப்படும். வெளிநாட்டு வீரர்கள் அந்தந்த நாடுகளிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து சேர்வார்கள்
ALSO READ | IPL 2020 தொடர் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை நடக்கலாம்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதிருப்தி
"எங்கள் அணியின் வீரர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வாரங்கள் பயிற்சி தேவைப்படும், இல்லாவிட்டால் பி.சி.சி.ஐ தேதிகளை அறிவித்தவுடன் எங்கள் எல்லா திட்டங்களையும் இறுதி செய்வோம். ஐ.பி.எல் தொடர் (IPL Season 13) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது, அதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்," என அணி உரிமையாளர் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் தெரிவித்தனர்.
ஐ.பி.எல்-க்குப் பிறகு இந்தியா நான்கு டெஸ்ட் தொடர்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒரு முக்கியமான விசியமாகும்.