IPL 2021 CSK VS RCB: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பீல்டிங் தேர்வு; ஆர்சிபி பேட்டி
IPL2021 CSK VS RCB: தோனி தலைமையிலான சிஎஸ்கேக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
IPL2021 CSK VS RCB: ஐபிஎல் 14 வது சீசனின் 35 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCP) அணிகள் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. தோனி தலைமையிலான சிஎஸ்கேக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. நடப்பாண்டு புள்ளிகள் அட்டவணையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் பங்கேற்று 5 போட்டியில் வெற்றிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெங்களூர் அணிக்குக்கு எதிராக சிஎஸ்கே அதிக வெற்றி:
ஐபிஎல் தொடரில் இரு அணிகள் பங்கேற்ற போட்டிகளை குறித்து பார்த்தால், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையே இதுவரை 27 போட்டிகள் நடந்துள்ளன. சென்னை 17 போட்டியில் வெற்றி, பெங்களூரு 9 ல் வெற்றி பெற்றது. இதில் ஒரு போட்டியில் எந்தவித முடிவும் இல்லைல். இந்த ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில், சென்னை பெங்களூரை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கடந்த 5 போட்டிகளில், சென்னை ஆர்சிபிக்கு எதிராக மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ALSO READ | ரன்கள் அடிக்க சிரமப்படும் சஞ்சு சாம்சன்! கேப்டன்சி பிரசர் காரணமா?
இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அந்த அணியின் தொடக்க ஜோடியான தேவதூத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டும்.
விராட் கோஹ்லி-ஏபி டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வெல்:
ஆனால் இந்த தொடரின் முதல் கட்டத்தில் கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமைகளை காட்ட வேண்டும்.
அதேவேளையில், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தங்கள் மோசமான செயல்பாட்டை மறந்து, புதிதாக தொடங்க வேண்டும். முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், கைல் ஜேம்சன், லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆல்-ரவுண்டர் வானிந்து ஹசரங்கா போன்ற வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும்.
ALSO READ | RCB-க்கு பிறகு இந்த IPL அணியில் சேரவுள்ளாரா விராட் கோலி? Dale Steyn கூறியது என்ன?
இளம் வீரர் ரிதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டம்:
மறுபுறம், சென்னை அணி, மும்பை அணிக்கு எதிராக இளம் வீரர் ரிதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்று தந்தார். ஆனால் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் மொயீன் அலியால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் அம்பதி ராயுடு காயமடைந்தார். அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி சரியாக செயல்படவில்லை.
அணிகள் விவரம் பின்வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரிதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், லுங்கி என்ஜிடி, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, கர்ன் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், கிருஷ்ணப்பா கவுதம், மிட்செல் சான்ட்னர், ரவி சீனிவாசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சேதேஷ்வர் புஜாரா, கேஎம் ஆசிப், ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), நவ்தீப் சைனி, க்ளென் மேக்ஸ்வெல், டான் கிறிஸ்டியன், ரஜத் பதிதர், துஷ்மந்தா சாமிரா, பவன் தேஷ்பாண்டே, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், முகமது அசாருதீன், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா, ஜார்ஜ் கார்டன், யுஸ்வேந்திர சாஹல், ஷாபாஸ் அகமது, தேவதூத் படிக்கல், கைல் ஜேமிசன், சுயஷ் பிரபுதேசாய், கேஎஸ் பரத், டிம் டேவிட், ஆகாஷ் தீப், ஏபி டிவில்லியர்ஸ்.
ALSO READ | IPL 2021: அம்பத்தி ராயுடு தொடர்ந்து விளையாடுவாரா? விளக்கமளித்தார் CSK கோச் Fleming
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR