IPL2022: சண்டை போட்டுக்கொண்ட சாஹல் - குல்தீப்
சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் தனியாக சண்டை போட்டுக்கொண்டிருந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாயத்தை தொடங்கி வைத்த போட்டியாக அமைந்துள்ளது டெல்லி மற்றும் ராஜஸ்தான் போட்டி. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் குறைவில்லாமல் நிறைவடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிக்க, பதிலுக்கு டெல்லி அணியும் இலக்கை நோக்கி சிறப்பாக விளையாடியது.
மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ
டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டெல்லி அணிக்காக ஸ்டைக்கில் இருந்த ரோமன் பவல், மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளை சிக்சருக்கு விளாச போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது 3 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது சலசலப்பு உருவானது. ரோமன் பவல் சிக்சருக்கு விளாசிய 3வது பந்துக்கு நோபால் அப்பீல் கேட்டு டெல்லி அணி முறையிட்டது.
ஆனால் களத்தில் நடுவராக இருந்த நிதீன் மேனன் அது நோபால் இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். களத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக முறையிட்டனர். 3வது நடுவருக்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினர். இதற்கு நடுவர் மறுத்ததால், டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் பேட்ஸ்மேன்களை களத்தை விட்டு வெளியேற வருமாறு அழைத்தார். டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பிரவீன் அம்ரே களத்துக்கே சென்று அம்பயரிடம் முறையிட்டார்.
இந்த நேரத்தில் களத்தில் இருந்த டெல்லி வீரர் குல்தீப் யாதவுடன், ராஜஸ்தான் வீரர் சாஹல் ஜாலியாக சண்டைபோட்டுக் கொண்டிருந்தார். கேப்டன் ரிஷப் பன்ட் வெளியே வருமாறு அழைக்க, அப்போது களத்தில் இருந்த குல்தீப் வெளியே வருவதா என கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், சாஹல், குல்தீப்பை விளையாட்டாக தலையில் அடித்து போய் பேட்டிங் செய்யுமாறு கூறினார். பெரிய பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும்போது இருவரும் ஜாலியாக விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR