இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐபிஎல் 2022 தொடங்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது குறித்து பேசிய ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்தார். மும்பையில் மிகப்பிரம்மாண்டமாக ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெங்களூரு அணியின் புதிய கேப்டன்..! இவரா?


மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் மே 29 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. வழக்கமாக 8 அணிகள் பங்கேற்று வந்த ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு முதல் 10 அணிகள் களமிறங்க உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியகமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக பெரும்பாலான போட்டிகள் மும்பையில் மட்டுமே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முடிவெடுத்துள்ளது.



மும்பையில் இருக்கும் 3 மைதானங்கள் மற்றும் புனேவில் இருக்கும் சர்வதேச மைதானத்திலும் லீக் போட்டிகள் நடத்தபடுகின்றன. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் மட்டுமே அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடத்துவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவர்களின் கோரிக்கையை பிசிசிஐ பரிசீலிக்கவில்லை. மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளைக் காண 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. சூழலைப் பொறுத்து அடுத்தடுத்த வாரங்களில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 


மேலும் படிக்க | IPL auction 2022: அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR