RCB அளித்த கவுரவத்தால் உருகும் கெயில், டிவில்லியர்ஸ்
ஆர்சிபி அணியின் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆர்சிபி அணியின் ஸ்டார் பிளேயர்களாக இருந்த கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு ’ஹால் ஆஃப் பேம்’ என்ற கவுரத்தை பெங்களுரு அணி வழங்கியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் பெங்களூரு அணி, அப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்று, மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது.
மேலும் படிக்க | விளையாடாத இவருக்கு 9.2 கோடி ரூபாய் தேவையா? லக்னோ பரிதாபம்
இந்தப் போட்டியில் பங்கேற்கும் முன் ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் பெங்களூரு அணியினர் கலந்து கொண்டனர். அதில், ஆர்சிபி அணிக்காக பங்களித்தவர்களை மறக்கக்கூடாது என்பதற்காக முதன்முறையாக ’ஹால் ஆஃப் பேம்’ என்ற கவுரவத்தை ராயல் சேலஞ்சர்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், கிறிஸ் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஆர்சிபி அணியின் ’ஹால் ஆஃப் பேம்’-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரையும் ஹால் ஆஃப் பேம்-ஆக அறிமுகப்படுத்திய பெங்களுரு அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி, அவர்களுடன் தனக்கு இருந்த பயணத்தையும், இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். கிறிஸ் கெயிலுடன் 7 ஆண்டுகளும், டிவில்லியர்ஸூடன் 11 ஆண்டுகள் பயணித்ததாக தெரிவித்த கோலி, அந்தப் பயணம் 2011 ஆம் ஆண்டு தொடங்கியதாக கூறியுள்ளார். அந்தப் பயணத்தில் 2 ஆட்டங்களை நினைவு கூர்ந்த அவர், அவை இரண்டும் எந்நாளும் மிக முக்கியமான ஆட்டங்களாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
"2016 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தை தலைகீழாக டிவில்லியர்ஸ் மாற்றினார். அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்தியது. கெயில் அடித்த 175 ரன்கள் இன்னிங்ஸை யார் மறக்க முடியும்? அந்த ஆண்டு அவர் நிறைய ரன்கள் குவித்தார்" கோலி பாராட்டினார். கோலியின் பேச்சில் உருகிய டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் அடுத்த ஆண்டு ஏதேனும் ஒரு ரோலில் ஆர்சிபி அணியுடன் இருப்போம் எனக் கூறினர்.
மேலும் படிக்க | இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் நிச்சயம் இடம் பெறமாட்டார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR