38 பந்துகளில் 78 ரன்கள் விளாசல்! தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட அயர்லாந்து வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியில், லோர்கன் டக்கரின் அதிரடி ஆட்டம் பிரம்மிக்க வைத்தது.
Ireland vs South Africa, 1st T20: தென்னாப்பிரிக்கா அணி அயர்லாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி, பிரிஸ்டோலில் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் அயர்லாந்து அணியுடன் களம் கண்டது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டிகாக் 7 ரன்களில் வெளியேறினாலும் அடுத்துவந்த ஹென்ரிக்ஸ் உள்ளிட்டோரின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 211 ரன்கள் குவித்தது. இமலாய இலக்கை நிர்ணயித்துவிட்ட தெம்பில் தென்னாப்பிரிக்கா பந்துவீச வந்தது. ஆனால் அயர்லாந்து அணியின் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது.
மேலும் படிக்க | உலக கோப்பை 2022 வெல்ல பிசிசிஐ போட்ட புதிய பிளான்! வெளியான அறிவிப்புகள்!
ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினர். தொடக்க வீரர்கள் அதிரடி தொடக்கத்தைக் கொடுத்து விரைவில் ஆட்டமிழந்திருந்தாலும், அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்த ரிதமை சரியாக பிடித்துக் கொண்டார் அடுத்து வந்த லோர்கன் டக்கர். தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். எதிர்க்கொண்ட பந்துகளையெல்லாம் பவுண்டரி சிக்சர்களுக்கும் விளாசினார். 38 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட 78 ரன்கள் குவித்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களையும் விளாசினார். அவர் களத்தில் இருக்கும் வரை தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி என்பது கனவு மாதிரி இருந்தது. ரசிகர்களும், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களும் எப்படியாவது அவரை அவுட் செய்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
ஒருவழியாக லோர்கன் அவுட்டான நிலையில், பின்னர் வந்த டாக்ரெல்லும் 43 ரன்கள் விளாசினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றனர். தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும், அயர்லாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஆட்டமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டி 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ