காமன்வெல்த் போட்டி 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2022, 05:42 PM IST
  • காமன்வெல்த் போட்டிகள் 2022
  • பதக்க வேட்டையை தொடரும் இந்தியா
  • பளூதூக்குதலில் மேலும் ஒரு வெண்கலம்
காமன்வெல்த் போட்டி 2022: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் title=

Commonwealth Games 2022: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் இந்திய வீரர்களின் அற்புதமான விளையாட்டு தொடர்கிறது. ஆண்களுக்கான 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் என ஒவ்வொரு முயற்சியிலும் எடையை உயர்த்திய லவ்ப்ரீத், அனைத்து முயற்சிகளிலும் எளிதாக பளு தூக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்

வெண்கலம் வென்ற லவ்ப்ரீத்

இறுதிப்போட்டிக்கு தேர்வாகி தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் சுற்றில் இருந்தார் லவ்ப்ரீத். அந்த சுற்றில் பின்னடைவை சந்தித்தாலும், வெண்கலம் வெல்லும் வாய்ப்பை தவறவிடவில்லை. கிளீன் அண்ட் ஜெர்க் முறை மூலம் மொத்தம் 355 கிலோ எடை தூக்கி அசத்திய அவர், வெண்கலப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 14வது பதக்கம் இதுவாகும். அதேசமயம், ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது வெண்கலம் பதக்கமாகும்.

மேலும் படிக்க | CWG 2022: 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா

லவ்ப்ரீத் சிங் சிறந்த முயற்சி

லவ்ப்ரீத் சிங் ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க்கில் சிறப்பாக செயல்பட்டார். ஸ்னாட்ச் சுற்றின் முதல் முயற்சியில் 157 கிலோவும், இரண்டாவது முயற்சியில் 161 கிலோவும், இறுதி முயற்சியில் 163 கிலோவும் தூக்கினார். கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் மூன்று முறையும் சிறப்பாக செயல்பட்ட அவர், மொத்தமாக 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். 

நயாபேயு தங்கம் 

இந்தப் பிரிவில் நயாபேயு மொத்தம் 360 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத் வென்றார். சமோவாவின் ஜாக் ஓப்லோக் 358 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளது. வெண்கலப் பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங், 6 செப்டம்பர் 1997 அன்று பஞ்சாபில் பிறந்தார். இந்திய கடற்படைக்காக தேசிய அளவில் விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் - தமிழக வீரர்களுக்கு இன்று இரண்டு வெற்றிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News