ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்தது தவறா?
உலக கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது
ஐபிஎல் ஆட்டங்கள் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்த டி20 போட்டிகள் உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முற்றிலும் மாறாக வெளிநாட்டு வீரர்களுக்கு அமைந்தது. மேக்ஸ்வெல், மில்லர் போன்ற வீரர்கள் தற்போது தங்களது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்களால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடியவில்லை.
ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு இந்தியா அணி டி20 உலக கோப்பையை இது வரை வெல்லவில்லை. இந்திய அணி இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக ஐபிஎல் தொடரை நடத்தியது பிசிசிஐ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பயிற்சி ஆட்டங்களை முறையாக ஏற்பாடு செய்யாததன் காரணமாக இந்திய அணி கோப்பையை இழந்தது. அதற்க்கு பதிலாக ஐபிஎல்லுக்கு முன்னுரிமை அளித்தது பிசிசிஐ. ஐபிஎல் உண்மையில் மிகவும் முக்கியமானது என்றால், ஏன் ஊதா கேப் மற்றும் ஆரஞ்சு கேப் பெற்ற ஒருவர் கூட அணியில் இடம் பெறவில்லை?
தற்போது நடந்து முடிந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளிலும் மிக மோசமாக இந்திய அணி படுதோல்வி அடைந்தது. வெற்றி பெற வேண்டி விளையாடுவது போல் இல்லாமல் கடமைக்கு ஆடுவது போல் விளையாடி வருகின்றனர் இந்தியா வீரர்கள். அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு உள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ மொத்த அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளது, இது ஐபிஎல்லை இன்னும் அதிக பணம் சம்பாதிக்கும் யுத்தியாக மாற்றியுள்ளது. இந்திய அணியில் உள்ள 11 வீரர்களும் சூப்பர் ஸ்டார்கள். 2 மாதங்கள் UAE இல் இருந்த போதிலும், தற்போது உலக கோப்பையில் படுமோசமாக ஆடி வருகின்றனர்.
ALSO READ படுமோசமாக ஆடிய இந்தியா! 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR