மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை செய்யப்படுகிறதா பாகிஸ்தான்?
நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணகளுக்காக பாகிஸ்தான் உடனான சுற்று பயணத்தை ரத்து செய்தது.
பல வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட்டை வளர்க்க பாகிஸ்தான் நிர்வாகம் பல முயற்சி எடுத்து வரும் நிலையில், மீண்டும் கிரிக்கெட்டுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க பட வாய்ப்புள்ளது. 18 வருடங்களுக்கு முன் நியூசிலாந்து அணி வீரர்கள் தங்கி இருந்த விடுதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பின் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. தற்போது மீண்டும் பாகிஸ்தான் வந்த நியூஸிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளது.
பிசிபி தலைமை நிர்வாகி வாசிம் கான் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, உலக கிரிக்கெட்டில் மீண்டும் எங்கள் நம்பகத்தன்மையை வளர்ப்பதில் நாங்கள் ஒரு பெரிய முயற்சியை செய்துள்ளோம். அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் பெற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விரைவில் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
நியூசிலாந்தின் அணியின் திடீர் இந்த முடிவு எங்களை திக்கு முக்காட செய்தது. இந்த முடிவு எங்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளதால், மற்ற நாடுகளை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள செய்ய கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. லாகூரில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அணியின் பேருந்து மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடக்க வேண்டிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. பாகிஸ்தானின் 'ஹோம்' போட்டிகள் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் விளையாடி எங்களுக்கு சிறிய வருவாய் மட்டுமே கிடைத்தது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் அணிகளுக்கு மற்ற நாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் அதே பாதுகாப்பு வழங்கப்பட்டது. "நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றது" என்று முன்னாள் வேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் ட்வீட் செய்தார், அதே நேரத்தில் கோபமடைந்த ரசிகர்கள் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கோரினர் என்று கான் கூறினார். மேலும், அடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொள்ள இருந்தது. இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்று பயணம் பயணத்தை ரத்து செய்யாமல் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகளை நடத்தலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR