இஷான் கிஷன் பார்ட்டியில் கலந்து கொண்டதால் கழற்றிவிடப்படவில்லை - டிராவிட் விளக்கம்
இஷான் கிஷன் பார்ட்டியில் கலந்து கொண்டதால் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்
ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, வெஸ்ட் இண்டீஸ், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை, மற்றும் டி20 தொடர்கள் என அனைத்து சர்வதேச தொடர்களுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்றிருந்த இஷான் கிஷன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு கோரினார். மன அழுத்தம் காரணமாக ஓய்வு கோரியதாக அவர் கூறினார்.
அதன்பிறகு, இஷான் கிஷன் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்களில் பங்கேற்றுள்ளார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இஷான் கிஷன். பின்னர் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த பிசிசிஐ ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில், பிசிசிஐ இஷான் கிஷன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவரை அணியில் இப்போது தேர்வு செய்யாமல் புறக்கணிப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | IND vs AFG: முதல் டி20யில் விராட் கோலி விளையாட மாட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இதனை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். இந்த தகவல்கள் குறித்து பிசிசிஐ விசாரணை நடத்தியது. விசாரணையில், இஷான் கிஷனின் நடத்தை ஏதாவது நன்னடத்தை விதிகளை மீறியதாக எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. இதனால், இஷான் கிஷன் பார்ட்டியில் கலந்து கொண்டதால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல்கள் தவறானவை என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
"இஷான் கிஷனின் நன்னடத்தை குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து ஓய்வு கோரினார். அந்த ஓய்வு முடிந்ததும் அவர் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். தற்போது, இந்திய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. அதனால், இஷான் கிஷன் இந்த தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. பார்ட்டி விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று டிராவிட் கூறினார்.
இதேபோல், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் எந்த நன்னடத்தை பிரச்சனையும் இல்லை என்றும் டிராவிட் தெரிவித்தார். தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. அதனால், அவர் இந்த தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க | IND vs AFG: ஜிதேஷ் சர்மாவா? சஞ்சு சாம்சனா? ரோஹித் எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ