ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடந்து வருகிறது. இதில் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய மொத்தம் 8 அணிகள் மோதின.


ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அட்லெடிகோ டீ கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி, டெல்லி டைனமோஸ் எப்.சி என முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.


கொல்கத்தா - மும்பை மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் மோதின. ஆனால் இந்த ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது. எனவே புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


இதேபோல கேரளா - டெல்லி அணிகள் மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கேரளா 1-0 என்ற கணக்கில் வென்றது. நேற்று இரவு நடந்த அரை இறுதி 2-வது சுற்று போட்டியில் டெல்லியை வீழ்த்தியது கேரளா அணி. 


அரைஇறுதியின் 2-வது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ்-டெல்லி டைனமோஸ் அணிகள் டெல்லியில் நேற்றிரவு எதிர்கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி சுற்றில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற முனைப்புடன் கேரள வீரர்களும், 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் டெல்லி வீரர்களும் கோதாவில் குதித்தனர். முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி முன்னிலை பெற்றது.


90 நிமிடங்கள் முடிவில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் முதலாவது சுற்றில் கேரளா 1-0 என்ற கணக்கில் வென்று இருந்ததால் கோல் வித்தியாசம் அடிப்படையில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையாக கணக்கிடப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணியை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 30 நிமிடங் கள் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை.


இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கேரளா தனது முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ கோலாக்கி அசத்தியது.


பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


வருகிற 18-ம் தேதி கொச்சியில் நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன.