FIFA _2018: கோலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
பெனால்ட்டி வாய்ப்பு முறைப்படி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி!
பெனால்ட்டி வாய்ப்பு முறைப்படி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதின. இதில், பெனால்ட்டி வாய்ப்பு முறைப்படி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரவு நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் கொலம்பியா, இங்கிலாந்து அணிகள் மோதி கொண்டன. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டி தொடங்கியதிலிருந்தே இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஆவல் காணப்பட்டது.
இந்நிலையில் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் வெற்றி பெற போட்டி போட்டு மல்லுக்கட்டி கொண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதற்கிடையே ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேய்ன் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார்.
இங்கிலாந்து அணியை பழி தீர்க்க துடித்த கொலம்பியா அணி, ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் கொலம்பியா அணியின் தடுப்பாட்டக்காரர் கோல் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் நடைபெற்ற பெனால்ட்டி வாய்ப்பு முறைப்படி இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
நன்றாக போராடியும் சோகத்துடன் வெளியேறியது கொலம்பியா அணி. அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகோஸ் இல்லாததால் கொலம்பியா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.