Jamshedpur FC vs Bengaluru FC: ஆன்லைனில் எங்கு எப்படி பார்ப்பது
ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கும் பெங்களூரு எஃப்சிக்கும் இடையிலான ஐஎஸ்எல் 2022-23 லைவ் ஸ்ட்ரீமிங்கை எப்போது, எங்கு, எப்படிப் பார்ப்பது என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களூரு எஃப்சி அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து மீண்டும் வலுவாக திரும்பியுள்ளது. அந்தவகையில் 14 போட்டிகளில் 16 புள்ளிகளைப் பெற்ற பெங்களூரு அணி தற்போது இந்தியன் சூப்பர் லீக் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று பெங்களூரு அணி ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்வதால் சைமன் கிரேசனின் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி செல்வர். இந்த நடக்க உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்தியன் சூப்பர் லீக் போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா விளையாட்டு வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில், ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை வீழ்த்தியது.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடுவார்? வெளியான தகவல்!
ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகளுக்கு இடையே புதன்கிழமை இந்தியன் சூப்பர் லீக் போட்டிக்கு முன்னதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
JFC vs BFC: போட்டி எந்த தேதியில் நடைபெறும்?
ஐஎஸ்எல் 2022-23 போட்டி ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி இடையே ஜனவரி 18 புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
ஐஎஸ்எல் 2022-23 JFC vs BFC: போட்டி எங்கு நடைபெறும்?
ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.
JFC vs BFC ஐஎஸ்எல் 2022-23 போட்டி எந்த நேரத்தில் தொடங்குகிறது?
ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி இடையேயான ஐஎஸ்எல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
JFC vs BFC ஐஎஸ்எல் போட்டியை எந்த சேனலில் காணலாம்?
ஜாம்ஷெட்பூர் எஃப்சி vs பெங்களூரு எஃப்சி போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
JFC vs BFC ஐஎஸ்எல் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எந்த ஓடிடி தளத்தில் பார்ப்பது?
ஜாம்ஷெட்பூர் எஃப்சி vs பெங்களூரு எஃப்சி போட்டி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள்: விஷால் யாதவ், பிரதிக் சௌத்ரி, எலி சபியா, லால்டின்லியானா ரென்த்லே, ரிக்கி லல்லவ்மா, லால்டின்புயா பச்சுவ், ரஃபேல் கிரிவெல்லாரோ, ப்ரோனே ஹால்டர், போரிஸ் சிங், ரித்விக் தாஸ், டேனியல் சுக்வ்
பெங்களூரு எஃப்சி அணிகள்: குர்ப்ரீத் சந்து, ஆலன் கோஸ்டா, சந்தேஷ் ஜிங்கன், பராக் ஸ்ரீவாஸ், பிரபீர் தாஸ், ரோஷன் நௌரெம், ரோஹித் குமார், ஜேவியர் ஹெர்னாண்டஸ், சுரேஷ் வாங்ஜாம், ராய் கிருஷ்ணா, சிவ நாராயணன்
மேலும் படிக்க | IND vs NZ: இன்று தொடங்கும் ஒருநாள் போட்டி! இத்தனை சாதனைகள் முறியடிக்கப்படுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ