கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்குப் பிறகு, அவரது தசைநார்கள் இயற்கையாக குணமாகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பும்போது ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். டேராடூனில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் படிக்க | கேஎல் ராகுலுக்கு திருமணம்! எப்போது தெரியுமா?
தசை நாறுகளில் பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் அவரது காயம் அடைந்த தசைநார்கள் இயற்கையாக குணமாகும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். "எல்லா தசைநார்கள் காயம் அடைந்துள்ளது, பின்பக்க க்ரூசியட் லிகமென்ட் (பிசிஎல்) கவலை அளிக்கிறது. எம்சிஎல் அறுவை சிகிச்சை மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இப்போது அவரது பிசிஎல் இரண்டு வாரங்களில் மதிப்பிடப்படும். அதற்கு மேலும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று நம்புகிறேன். தற்போது, அவர் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளார்," என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன்பிறகு, பிசிசிஐ அவரை NCAக்கு உட்படுத்தும். "வழக்கமாக தசைநார்கள் நான்கு முதல் ஆறு வாரங்களில் குணமாகும். அதன் பிறகு மறுவாழ்வு மற்றும் வலுவூட்டல் தொடங்கும். இன்னும் இரண்டு மாதங்களில் அவர் விளையாடத் திரும்புவது மதிப்பிடப்படும். இது கடினமான பாதையாக இருக்கும் என்பதை பந்த் உணர்ந்தார். அவரும் ஆலோசனை அமர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவர் விளையாடத் தொடங்குவதற்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம், ”என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ