இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து 15-21 16-21 என்ற கணக்கில் அகானே யமகுச்சியிடம் தோற்று வெள்ளி பதக்கத்துடன் வெளியேறினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமக்குச்சியை எதிர்கொண்டார். 


பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சிந்து-விற்கு எதிராக யமக்குச்சியின் ஆட்டம் சற்று கடினமாக தான் இருந்தது, எனினும் சற்று சுதாரித்துக்கொண்ட யமக்குச்சி இடைவெளிக்கு பின்னர் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆட்டத்தின் போக்கு மாறியது. முதல் செட்டை வென்று இரண்டாவது செட்டிலும் யமகுச்சி ஆதிக்கம் தொடர்ந்து. இதன் மூலம் 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் யமகுச்சி சிந்துவை எளிதாக வென்றார்.



இதன் மூலம் தனது முதல் இந்தோனேஷிய ஓபன் கோப்பையை அகானே யமகுச்சி பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் தனது மூன்றாவது பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியன் மற்றும் உலக நம்பர் 3 வீராங்கனையான சீனாவின் சென் யூஃபியை சிந்து வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய உலக நம்பர் 5 இந்தியர் சிந்து, கடந்த நான்கு போட்டிகளில் தன்னை எதிர்த்த யமகுச்சியை விட 10-4 முன்னிலை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.