பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் போட்டியின் 5-வது நாள் ஆட்டம் நடைபெறுமா என்று சந்தேகமாக இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியா இடையேயான மோதல் கனமழையால் சிதைந்துவிடுவதற்கான வாய்ப்புகளை கனமழை சுட்டுக்காட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை, ஏற்கனவே 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. போட்டி மீண்டும் தொடங்கினாலும், மேகமூட்டமான சூழல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.



வானிலை எச்சரிக்கை


மழைப்பொழிவு 95 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. 97 சதவீத ஈரப்பதத்துடன் இன்று நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால், வானம் இருட்டாக காணப்படுகிறது. மழை நிற்கவில்லை என்றால் போட்டி டிராவில் முடியும். எனவே, இந்த முதல் போட்டியில் யாருக்கு வெற்றி என்பது, கிரிக்கெட்டை விட மழை தீர்மானிப்பதாகவே இருக்கும்.


ஆனால், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனது கிரிக்கெட் திறமையை நிரூபித்திருக்கிறார் ஜோ ரூட். ஆட்டத்தின் நான்காவது நாளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் 'தனித்துவமான' சாதனையை அவர் முறியடித்தார்.


மேலும் படிக்க | ஆகாஷ் சோப்ராவின் ஆரூடம்! இனி ரோஹித் ஷர்மா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் இல்லை!


ஆஷஸ் முதல் போட்டியில் ஜோ ரூட்டின் சாதனைகள்
30வது டெஸ்ட் சதம்
எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் தனது 30வது டெஸ்ட் சதத்தை அடித்தார். தற்போதைய பேட்டர்களில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே 31 சென்சுரி என்ற அதிக டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். 
 
ஜோ ரூட்
இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த பிறகு, தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரூட், ஸ்டம்ப்டு ஆவதற்கு முன்பு 11,168 டெஸ்ட் ரன்களை எடுத்திருந்தார்.


விராட் கோலியின் சாதனை முறியடிப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நாதன் லயன் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆவதற்கு முன்பு டெஸ்டில் 8,195 ரன்கள் எடுத்திருந்தார். 


மேலும் படிக்க | MS Dhoni: தொழிலதிபர் தோனியைத் தெரியுமா? திறமையான விளையாட்டு வீரரின் மற்றொரு முகம் 


சிவநாராயணன் சந்தர்பால்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்ப் ஆவதற்கு முன் அதிக ரன்கள் குவித்த உலக சாதனையை படைத்துள்ளார். சந்தர்பால் ஸ்டம்ப்டு ஆவதற்கு முன்பு டெஸ்டில் 11,414 ரன்கள் எடுத்தார்.  
 
கிரேம் ஸ்மித்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கிரேம் ஸ்மித் ஸ்டம்ப்டுக்கு முன் 8,800 டெஸ்ட் ரன்களை எடுத்திருந்தார். 
 
ஜோ ரூட்டின் சாதனை ஸ்கூப்கள் மற்றும் ஸ்வீப்களுடன்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஸ்கூப்கள் மற்றும் ஸ்வீப்களில் 1,194 ரன்கள் எடுத்துள்ளார், இது மற்ற எந்த டெஸ்ட் மேட்ச் பேட்டரை விடவும் அதிகம். இதில் 491 ரன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கில்ஸின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்படுவதற்கு முன்பு 7,419 டெஸ்ட் ரன்களை எடுத்தார்.


மேலும் படிக்க | இங்கிலாந்து அணியை வலுவாக்கும் ஜோ ரூட், அணிக்கு முதுகெலும்பு போன்றவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ