உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC Final 2023) இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், காயம் காரணமாக அணியில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களம் காண இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட்


டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 59 டெஸ்டில் 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹேசில்வுட் வருகையால் ஆல்ரவுண்டர் மைக்கேல் நெசர் மற்றும் சீன் அபோட் ஆகியோரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. நெசரும் அபோட்டும் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். ஹேசில்வுட்டுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரது இடத்துக்கு இருவரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் ஹேசில்வுட்டுக்கு மாற்றான வீரரை களமிறக்க ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. டிசம்பர் 2021க்குப் பிறகு அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்! பஞ்சாயத்து செய்யும் ICC அதிகாரிகள்


பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை


ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் WTC இறுதிப் போட்டிக்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி, இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி எந்த பயிற்சி ஆட்டத்திலும் ஆடவில்லை என கூறினார். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இங்கிலாந்திலேயே இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.


WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.


மேலும் படிக்க | WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது - ரிக்கி பாண்டிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ